பல்லடத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் அமைந்துள்ள உலர் தீவனக் கிடங்கினை கலெக்டர் ச.ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      திருப்பூர்
aa1

திருப்பூர் மாவட்டம், பல்லடம் வடுகபாளையம் கால்நடை மருந்தகத்தில், அமைந்துள்ள உலர் தீவனக் கிடங்கினை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

35 இலட்சம் கால்நடைகளும், 6 இலட்சம் செம்மறி ஆடு

உலர்  தீவன கிடங்கினை மாவட்ட கலெக்டர்  பார்வையிட்டு தெரிவித்ததாவது திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 35 இலட்சம் கால்நடைகளும், 6 இலட்சம் செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளும் உள்ளது. இவ்வாண்டு கோடைகாலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் கால்நடைகளுக்கு தீவனப்பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இப்பற்றாக்குறையினை போக்கும் வகையில்  மாவட்ட நிர்வாகம் சார்பில்  நடவடிக்கைகள் மேற்கொண்டு கால்நடைகளுக்கான உலர்தீவனம் வழங்கப்பட்டு வருகிறது.

10 இடங்களில் உலர் தீவன கிடங்குகள்

மேலும், மாவட்ட கலெக்டர் அவர்களின் தலைமையில் உலாதீவனக்கிடங்குகள் அமைக்க குழு அமைக்கப்பட்டு பெதப்பம்பட்டி, குறிச்சிக்கோட்டை, மடத்துக்குளம், தாராபுரம, மூலனூர்,  வெள்ளகோவில், காங்கயம், செங்கப்பள்ளி, சேயூர் மற்றும் பல்லடம் ஆகிய 10 இடங்களில்  உலர்தீவனக்கிடங்குகள் அமைக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. மேலும் பொங்கலூர், குண்டடம், பெருமாநல்லூர், ஆகிய இடங்களில் துணை கிடங்குகளும் ஆரம்பிக்கப்பட்டு கால்நடைகளுக்கு தேவையான உலர்தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  உலர்தீவனக்கிடங்குகளுக்கு தேவையான உலர்தீவனங்கள் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு அதனடிப்படையில் வைக்கோல் பெறப்பட்டு வருகிறது. இதுவரை ரூபாய். 83 இலட்சம் மதிப்புள்ள 756 மெட்ரிக் டன்கள் உலர்தீவனம் பெறப்பட்டு  நமது மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 10 உலர்தீவனக்கிடங்குகளின் மூலம்  வழங்கப்பட்ட வைக்கோல் உலர்தீவனத்தை

7,600 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்

சுமார் 7,600 விவசாயிகள் பெற்று தங்களது கால்நடைகள் சுமார் 36, 400 எண்ணிக்கைக்கு பயன்படுத்தி அதன் மூலம் கால்நடைகளின் நலம் பேணப்பட்டு வருகிறது என மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்கள். பின்னர் விவசாயிகளுக்கு அசோலா வளர்ப்பதற்கான மக்காச்சோள விதைகளையும் கால்நடைகளுக்கான உலர்தீவனங்களையும் மாவட்ட கலெக்டர்  வழங்கினார்கள்.
மேலும், அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடைகளின் தீவனத்திற்காக அசோலா பச்சை பாசி வளர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு  வருகிறது. அசோலா வளர்த்து கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் கால்நடைகளின் புரதச்சத்து தேவையை ஈடு செய்ய ஏதுவாக இருக்கும் எனவும் இதனை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும்  மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்கள்.

250 மரங்கன்றுகள்

இதனைத்தொடர்ந்து, பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், காட்டூர் ஊராட்சி, செம்மடை பாளையம் குட்டையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் பெருமளவு மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் நடப்பட்டிருந்த  சுமார் 250-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளையும் மற்றும் காட்டூர்புதூரில் பொது மக்களின் குடிநீர் தேவைக்காக ரூ.4.50 இலட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தும் பணியினையும் மாவட்ட கலெக்டர்  நேரில் சென்று பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்வின்போது, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (கூ.பொ) மரு. முருகன்,  திருப்பூர் கோட்ட துணை இயக்குநர்  மகேந்திரன், கால்நடை மருத்துவர்கள் நடராஜ், அன்பரசு, முத்துசெல்வி, பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ப.மகுடேஸ்வரி, மாணிக்கம், உதவி பொறியாளர்கள் கற்பகம், கார்த்திக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

17.12.2019 to 14.01.2020 Markali Monthly Rasipalan | 2019 டிசம்பர் மாத ராசிபலன்

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: