முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேச்சு நடத்த நாங்கள் எப்போதும் தயார் : ஒ.பி.எஸ். அணிக்கு அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      அரசியல்
Image Unavailable

சென்னை  - பேச்சு நடத்த நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம். எங்கள் கதவுகள் திறந்தே உள்ளது என்று ஒ.பி.எஸ். அணிக்கு அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார். சுனாமி, புயல், கடல், கொந்தளிப்பு போன்ற நேரங்களில் நீச்சல் தெரியாத மீனவ சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழக்கும் பரிதாபம் நடைபெறுகிறது. இந்த மீனவ சிறுவர்களுக்கு இலவசமாக நீச்சல் பயிற்சி அளிக்க கடலோர காவல்படை உதவியுடன் ஒருமாத காலத்திற்கு இலவசமாக நீச்சல் பயிற்சி  நேற்று முதல் சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நீச்சல் குளத்தில் தொடங்கியது.

இதனை நேற்று நிதியமைச்சர் ஜெயக்குமார் துவக்கிவைத்தார். கடலோர காவல் படை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு உள்ளிட்ட பலர் இதில்  கலந்துகொண்டனர். இதனை  தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மறைந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டம் மீனவ   சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பது. அரசு நிதியுதவியுடன் கடலோர காவல் படை உதவியுடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா  நீச்சல் குளத்தில் மீனவ சிறுவர்களுக்கு இலவச பயிற்சி இன்று முதல் தொடங்கியுள்ளோம் என்றார்.
இதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:-

அதிமுக இரு அணிகள் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நாங்கள்  எப்போதும் தயாராக உள்ளோம். எங்கள் கதவுகள் திறந்தே உள்ளது. ஆனால் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஓ.பி.எஸ் அணிதான் முடிவு  செய்யவேண்டும். அந்த அணியை சேர்ந்த செம்மலை எங்கள் அணியிலிருந்து 12 அமைச்சர்கள், 35 எம்.எல்.ஏ.,க்கள் இணைய தயாராக உள்ளதாக  மிகப்பெரிய பொய்யை கூறியுள்ளார்.

ஓபிஎஸ் அணி கடலில் மூழ்கும் ஓட்டை படகு. இந்த ஓட்டையை உப்பு வைத்து அடைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் வீண் முயற்சியில் ஈடுபட்டு  வருகின்றனர். மாறாக ஓபிஎஸ் அணியில் இருக்கும் ஒரு சில உறுப்பினர்கள் எங்களுடன் இணைவதற்காக பேசி வருகின்றனர்.தமிழகத்தில் சட்டம்  ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் திமுக ஆட்சி காலத்தில்தான் நீதிமன்றத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இன்ஸ்பெக்டர்கள் தாக்கப்பட்டனர். என பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியது. ஆனால் மறைந்த ஜெயலலிதா வழியில் அரசு சிறப்பாக  செயல்பட்டு  வருகிறது. அந்தந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு அமைச்சர்கள் ஆய்வு கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் சிறப்பாக  உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்