எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தாதா ஆனந்தராஜ், தன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறார். ஆனால் அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, அவரை கைது செய்யும் முயற்சியில் காவல்துறை அதிகாரி சம்யுக்தா ஈடுபடுகிறார். அதே சமயம், தொழில் போட்டி காரணமாக உடன் இருக்கும் சிலர் ஆனந்தராஜை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். இந்த இரண்டு தரப்பினரிடம் இருந்து ஆனந்தராஜ் தப்பித்தாரா? இல்லையா? என்பதை கலகலப்பாக சொல்வதே ’மெட்ராஸ் மாஃபியா கம்பேனி. மிரட்டல் நாயனாக வலம் வந்த ஆனந்தராஜ் தற்போது நகைச்சுவை நாயகனாக சிரிக்க வைக்கிறார். இந்த படத்தில் வில்லத்தனமான நடிப்பு மூலம் மிரட்டவும் செய்கிறார், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சக்யுக்தா, காக்கி சீறுடையில் கம்பீரமாக இருக்கிறார். தீபா, முனீஷ்காந்த், ஆராத்யா, ராம்ஸ் சசிலயா உள்ளிட்ட அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை ஒகே ரகம். எழுத்தாளர் வி.சுகந்தி அண்ணாதுரை, ”ஆட்டம் போடும் மனிதா நீ ஒருநாள் அடங்கிப் போவாய் தனியா என்ற கருத்தை உணர்த்த முயற்சித்திருக்கிறார். திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஏ.எஸ்.முகுந்தன், ஆனந்தராஜை நாயகனாக வைத்துக் கொண்டு காமெடி படமாக மட்டும் இன்றி மக்களுக்கு கருத்து சொல்லும் விதமாகவும் திரைக்கதையை கையாண்டிருப்பதற்காக அவரைப் பாராட்டலாம். மொத்தத்தில், ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனிக்கு ஒரு முறை சென்று வரலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


