எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உடல் என்பது, எலும்புகளைத் தூண்போல நாட்டி வைத்து, அவற்றின் இருப்பிடம் மாறி விடாமல் இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, அவற்றுக்கு இடையில் தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, தோலால் மூடி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை அடக்கி உடல் என்ற உருவம் உண்டாக்கப்பட்டிருக்கிறதாம். இன்றைய நவீன மருத்துவம் மனித உடம்பை அதன் செயலின் பொருட்டு பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து வகைப்படுத்தியுள் ளது. நவீன மருத்துவம் தேகத்தின் அடிப்படை யாகக் கருதும் எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், தசை மண்டலம், மூச்சு மண்டலம் ஆகிய ஐந்து மண்டலங்களும் சேர்ந்ததுதான் நம்முடைய தேகம் என்பதை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் தம் மதிநுட்பத்தால் மேற் கண்ட பாடல் மூலம் நமக்குத் தெரியப்படுத்தி உள்ளார்கள்.
எனவே, விஞ்ஞானம் விண்ணை முட்டி அதற்கு மேலும் வளரலாம். ஆனால் விஞ்ஞானம் ஒருக்காலும் சித்தர்களின் ஞானத்திற்கு ஈடாகாது. ஏன்? எப்படி என்று எப்போதும் கேள்விகளையே எழுப்பிக் கொண்டிருந்தால் கடைசியில் குழப்பம்தான் மிஞ்சும். சில நேரங்களில் சித்தர்களின் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் உயர அதுவே வழியாகும்.நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைதல்தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் (நெருப்பு) பித்த நோய்களும், காற்றினால் (வாயு) வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.பிணியுடையவனே மனிதன். தனக்கு வரும் பிணியை மதிநுட்பம், மன திடம் போன்றவற் றால் போக்கிக் கொள்வதே சாமர்த்தியம்.
நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய சித்தர்களைச் சரணடைவதே உத்தமம். வானத்தை முட்டும் கட்டிடங்களும் குளிரூட்டப் பட்ட மருத்துவமனைகளும் நுனிநாக்கு ஆங்கிலமும் ஒருபோதும் நோயை முழுமையாய் விரட்டிவிடாது. நமக்குநாமே மருத்துவனாகி, நமது உடம்பை நாமே பகுத்துப் பார்க்கும் மதிநுட்பத்தை நாம் பெற வேண்டும்.மானுட உடலைப் பீடிக்கும் நோய்கள் மொத்தம் 4448 ஆகும். அதில் மிகவும் கடுமை யான நோய்கள் 448 என திருமூலர் குறிப்பிடு கிறார். கடுமையான நோய்கள் தேகத்தைத் தாக்கி னால், விரைவில் நலம் பெற சிவபெருமானை வேண்டுங்கள் என்று திருமூலர் கூறுகிறார்.
உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல, திருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும், முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள். பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.
கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். துவர்ப்புக்கும் வாயுவுக்கும் ஆகாது. ஆனால் வாழைப்பூவை கடலைப்பருப்பு சேர்த்துத்தான் பொரியல் செய்து சாப்பிடு கிறோம். கடலைப்பருப்பு வாயுப் பதார்த்தம். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது? அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவை யான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.
கடுக்காயை மருந்தாக்குவது எப்படி?
கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்
கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது. பின் வரும் சித்தர் பாடலைக் கவனியுங்கள்.
"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.'
காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
தென்னாட்டவருக்கு திரிபலா...
திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்.
உடல் வலிமை பெற...
நூறு கிராம் கடுக்காய், சிலாசத்து பற்பம் 50 கிராம்- இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு காலை- இரவு சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்; நரம்புகள் முறுக்கேறும்.
பல் நோய்கள் தீர...
கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதில் பல் துலக்கி வர அனைத்து பல் வியாதிகளும் தீரும்.
மூல எரிச்சல் தீர...
கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண் ஆகியன ஆறும்.எனவே, கடுக்காய் உங்கள் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷ மாகும். கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது. நாமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இந்த உடல் பெற்ற உபாயம் அறிவோம். நல்லன செய்து நலம் பல பெறுவோம். கடுக் காயைக் கருத்தில் வையுங்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-04-2025
22 Apr 2025 -
புதுச்சேரியில் பேருந்து நிலையத்தை திறக்க கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
22 Apr 2025புதுச்சேரி : புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க. மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
-
40-வது ஐ.பி.எல். லீக் ஆட்டம்: குஜராத் டைட்டன்ஸ் வெற்றி
22 Apr 2025கொல்கத்தா : கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
22 Apr 2025சென்னை : தமிழ்நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை
22 Apr 2025புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
-
பிராமணர்கள் குறித்த அவதூறு கருத்து: மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்
22 Apr 2025டெல்லி : பிரமாணர் சமூகம் குறித்த கருத்துக்கு மீண்டும் மன்னிப்புக் கோரியிருக்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.
-
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் : சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
22 Apr 2025சென்னை : அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தில் உரிய நேரத்தில், உரிய முடிவை அரசு எடுக்கும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ள
-
3 ஆண்டுகளாக நீடிக்கும் உக்ரைன் போர்: அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்: ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு
22 Apr 2025மாஸ்கோ : உக்ரைன் போர் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
-
புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் குழுவில் 4 இந்திய கார்டினல்களுக்கு இடம்
22 Apr 2025வாடிகன் : புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் குழுவில் 4 இந்திய கார்டினல்கள் இடம் பெற்றனர்.
-
இந்த ஆண்டில் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
22 Apr 2025சென்னை : தமிழக சட்ட சபையில் மின்சாரத்துறை மானியக் கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்புகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.
-
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் : சென்னை ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2025சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன், கன்னுக்குட்டி ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
-
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகள் கைது
22 Apr 2025சென்னை : சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு மீது விஜய் கடும் தாக்கு
22 Apr 2025சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களைத் தேர்தல் நேரத்தில் மட்டுமே நம்ப வைத்து ஏமாற்றுவதைக் கைவிட்டு விட்டு கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்ட
-
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
22 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு: இறுதி தரவரிசை பட்டியல் வெளியீடு
22 Apr 2025சென்னை : குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.
-
கவர்ச்சிகரமான முதலீட்டு திட்டங்கள்: தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை
22 Apr 2025சென்னை : அதிக லாபம் தரும் கவர்ச்சிகரமான முதலீட்டு தகவல்களை நம்ப வேண்டாம் என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக சம்பளம்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
22 Apr 2025சென்னை : தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
பாகிஸ்தானில் விபத்து: 16 பேர் பலி
22 Apr 2025லாகூர் : பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள மலைப்பகுதியில் அதிவேகமாகச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.
-
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் குழந்தைகளுக்கு பரிசளித்த பிரதமர் மோடி
22 Apr 2025டெல்லி : அமெரிக்க துணை ஜனாதிபதி குழந்தைகளுக்கு பரிசளித்தார் பிரதமர் மோடி.
-
ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை பார்வையிட்ட ஜே.டி.வான்ஸ்
22 Apr 2025ஜெய்ப்பூர் : இந்தியா வந்துள்ள அமெரிக்கா துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், நேற்று குடும்பத்துடன் ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை பார்வையிட்டார்.
-
ஜம்மு-காஷ்மீரில் வெள்ளம்-நிலச்சரிவு: முதல்வர் உமர் அப்துல்லா நேரில் ஆறுதல்
22 Apr 2025ஸ்ரீநகர் : விலைமதில்லாத உயிர்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான நோக்கம்.
-
மோசடி வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
22 Apr 2025ஹைதராபாத் : ரியல் எஸ்டேட் நிறுவன நிதி மோசடி தொடர்பான வழக்கில் வரும் 28-ம் தேதி ஹைதராபாத் அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை
-
யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வில் உ.பி.யை சேர்ந்த மாணவி முதலிடம்
22 Apr 2025புதுடெல்லி : 2024 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் (ஏப். 22) வெளியிடப்பட்டுள்ளன.
-
குஜராத் குடியிருப்பு பகுதியில் பயிற்சி விமானம் விழுந்து விபத்து - விமானி பலி
22 Apr 2025குஜராத் : குஜராத்தில் குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது. இதில், விமானி சம்பவ இடத்திலேயே பலியானார்.