முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2025      உலகம்
PM-Modi-2025-09-17

ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அக்கட்சி சார்பில் வெவ்வேறு வகையான சேவை பணிகள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன. அவருக்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நேற்று தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவருடைய தலைமைத்துவம் மற்றும் உள்ளார்ந்த ஈடுபாடு ஆகியவற்றுக்காக பிரதமர் மோடிக்கு அவர் புகழாரம் சூட்டியுள்ளார். அவருடன் செல்பி எடுத்த புகைப்படம் ஒன்றையும் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். இதுபற்றி மெலோனி வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 75-வது பிறந்த நாள் வாழ்த்துகள்.

அவருடைய வலிமை, மனவுறுதி மற்றும் கோடிக்கணக்கான மக்களை வழிநடத்தி செல்லும் திறமை ஆகியவை ஊக்கம் ஏற்படுத்த கூடியவை. இந்தியாவை ஒளி நிறைந்த வருங்காலத்திற்கு தொடர்ந்து வழிநடத்தி செல்வதற்கும் மற்றும் நம்முடைய நாடுகளுக்கு இடையேயான உறவுகளை இன்னும் வலுப்படுத்தவும் தேவையான ஆரோக்கியம் மற்றும் சக்தியை அவர் பெற, நட்புணர்வு மற்றும் மதிப்பு ஆகியவற்றுடன், நான் வாழ்த்துகிறேன் என பதிவிட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து