Idhayam Matrimony

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாக்., போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2025      விளையாட்டு
17-Ram-86

Source: provided

அபுதாபி: இந்திய வீரர்கள் - பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கை குலுக்காமல்... 

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்வ் வெற்றிபெற்றது. ஆட்டத்துக்கு முன்னதாக, டாஸ்ஸின் போதும், போட்டி முடிந்தும் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பாகிஸ்தான் அணியினருடன் கை குலுக்காமல் தவிர்த்தனர்.

விலகும் யோசனை... 

பாகிஸ்தான் அணியினருடன் கை குலுக்காமல் தவிர்த்த விவகாரம் பூதாகரமான நிலையில், இந்த விவகாரத்தில் நடுவர் ஆண்டி பைகிராஃப்ட்டை(ஜிம்பாப்வே) நீக்க வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர் மீது குற்றம் சாட்டியிருந்தது. அவ்வாறு நீக்காவிட்டால் ஆசிய கோப்பை போட்டியிலிருந்து விலகும் யோசனையில் பாகிஸ்தான் வாரியம் இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், ஐசிசியும் பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தது.

ஆண்டி பைகிராஃப்ட்... 

ஒருவேளை பாகிஸ்தான் அணி போட்டியில் இருந்து விலக முடிவு செய்திருந்தால், இந்த நடவடிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு 16 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும். இந்த நிலையில், குரூப் சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் பாகிஸ்தான் அணி இன்று (செப்.17) மோதும் நிலையில், அந்த ஆட்டத்துக்கான பிரதான நடுவரான ஆண்டி பைகிராஃப்ட், போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டி நடுவரான ஆண்டி பைக்ராஃப்ட்டுக்கு பதிலாக ரிச்சி ரிச்சர்ட்சன் போட்டி நடுவராக நியமிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தகவலறிந்த நபர் ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து