முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2025      தமிழகம்
EPS-1-2025-09-17

சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் கடிதம் கொடுத்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோரும் உடன் சென்றார். பின்னர் அமித்ஷாவும், பழனிசாமியும் தனியே கலந்துரையாடினர்.

இதில் சமீப காலமாக வலுப்பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக் குரல், கூட்டணி பலம், பலவீனம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், எடப்பாடியோ, முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கடிதம் கொடுக்கவே சென்றேன் என்று கூறியுள்ளார். கடிதம் வழங்கும் புகைப்படம் உள்ளிட்ட படங்களையும் அவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களோடு (நேற்று முன்தினம் இரவு) சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவருக்கு இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கிட வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து