Idhayam Matrimony

2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2025      இந்தியா
Nirmala 2024-12-07

அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி. வருவாய் 2025-ம் ஆண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. கலால் வரி, வாட், சேவை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஜி.எஸ்.டி. என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டன.

இந்த ஜி.எஸ்.டி. 4 அடுக்குகளை கொண்டிருந்தது. அதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்துப்பொருட்கள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த ஜி.எஸ்.டி. விகிதங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வெறும் 5 மற்றும் 18 சதவீத அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வகையில் வரி விகிதம் மாற்றப்பட்டுள்ளது. அதேநேரம் சிகரெட் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கும் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த வரி குறைப்பு மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கணிசமாக குறையும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மக்களின் வாழ்க்கை செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜி.எஸ்.டி. குறைப்பு வருகிற 22-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிலையி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் குறித்த விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;- இரண்டு அடுக்குகள் (5 சதவீதம் மற்றும் 18 சதவீதம்) மட்டுமே கொண்ட புதிய ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையால், பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும். மக்கள் கையில் பணத்தின் இருப்பு அதிகரிக்கும். ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு முன், மத்திய அரசு 5 அம்சங்களை கவனத்தில் கொண்டிருந்தது. 

அவை, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரி விகிதத்தைக் குறைத்தல், நடுத்தர வர்க்கத்தினரின் நலன்களை நிறைவேற்றுதல், விவசாய சமூகத்திற்கு பயனளித்தல், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பயனளித்தல், வேலைவாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி திறனை உருவாக்கும் தொழில் துறைகளுக்கு பயனளித்தல் ஆகியவை ஆகும். 2017-18ம் நிதியாண்டில் ரூ.7.19 லட்சம் கோடியாக இருந்த ஜி.எஸ்.டி. வருவாய் 2025-ம் ஆண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்ந்தது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 65 லட்சத்தில் இருந்து 1.51 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து