எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ம் தேதி, பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 17-ம் தேதி மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு முப்பெரும் விழா கரூர் கோடங்கிபட்டியில் நேற்று மாலை தொடங்க உள்ளது. இவ்விழாவில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “என்னை வகுத்தால் என் தம்பிகள். என் தம்பிகளைக் கூட்டினால் நான்.” என்றார் பேரறிஞர் அண்ணா. புரட்சியாகத் தமிழ் மண்ணில் திராவிட முன்னேற்றக் கழகம் வேர்விட்ட இந்த 76 ஆண்டுகளில், தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு. தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் தி.மு.க என்று வளர்ந்திருக்கிறோம். ஓரணியில் தமிழ்நாடு எனத் தலைநிமிர்ந்து நின்று பகையை வெல்வோம். தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என அதில் பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


