முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் மாவட்டம் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.47,93,090க்கான காசோலை : மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்

திங்கட்கிழமை, 15 மே 2017      சென்னை
Image Unavailable

மாவட்ட சமூகநல அலுவலகம், காஞ்சிபுரம் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தும் ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு இல்லங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த வளாகங்கள்-2, முதியோர் இல்லம்-1, மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் காப்பகம்-1, ஆகிய நிறுவனங்களுக்கு 2016-2017ம் ஆண்டுக்கான மாநில அரசு மானியத்தை சமூக நலத்துறையின் மூலம் பெற்று வழங்கப்படும்.

காசோலை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துரைசாமி ஜெனரஸ் சோசியஸ் எஜீகேஷன் அசோசியேஷன் வில்வராயநல்லூர், காஞ்சிபுரத்திற்கு ரூ.12,60,420/-ம், அன்னை பாத்திமா சைல்டு வெல்பர் சென்டர், காரப்பாக்கம், காஞ்சிபுரத்திற்கு ரூ.11,88,420/-ம், அன்பு தொண்டு நிலையம், பாரதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திற்கு ரூ.2,86,250/-ம், பிரேமா வாசம், கெருகம்பாக்கம், காஞ்சிபுரத்திற்கு ரூ.20,58,000-த்திற்கான காசோலைகளை தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இத்தொகையை கொண்டு முதியோர் இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகத்தின் பராமரிப்பு செலவுகள், தங்கியுள்ளவர்களுக்கு உணவு, உடை மற்றும் அடிப்படை தேவைகள் செய்து தரப்படும். மேலும் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன் இல்லங்கள், காப்பகங்கள் பராமரிக்கும் பணியாளர்களுக்கு சம்பளமும் இந்த மானியத் தொகையிலிருந்து வழங்கப்படும். இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட சமூக நல அலுவலச.சங்கீதா உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago