அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரின் முயற்ச்சியால் ‘ஏ +’ அங்கீகாரம் மேலும் ஏழு ஆண்டுகள் நீடிப்பு:

alagappa

காரைக்குடி,-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தை நாக் கமிட்டி முதன் முறையாக கடந்த 2005ல் ஆய்வு செய்தனர். முதன்முறையாக ‘ஏ’ கிரேடு தகுதி பெற்றது. 2011ம் நடந்த ஆய்வில் 3.21 மதிப்பெண் பெற்று அதே கிரேடை தக்க வைத்தது. மூன்றாவது சுழற்ச்சிக்கான ஆய்வு கடந்த ஏப்.10 முதல் 12 வரை நடந்தது. பல்கலைக்கழத்தின் ஒட்டு மொத்த திறன்களுள் தேசிய தர மதிப்பீட்டு குழு ஜந்து சிறப்பு திறன்களை சுட்டி காட்டியுள்ளது. மேம்பட்ட மற்றும் நுட்பமான அறிவியல் சோதனை கூடங்கள் அனுபவமும் அர்ப்பணிப்பும் மிக்க ஆசிரியர்கள், சிறந்த கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப உள் கட்டமைப்புகள், இயற்கையோடு இணைந்து சுற்றுசூழல், முன்னாள் மாணவர்களின் ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில ‘ஏ’ பிளஸ் தகுதியை வழங்கியுள்ளது. கடந்த 2016 17ம் ஆண்டில் இந்திய முழுவதும் தர நிர்ணயம் செய்யப்பட்ட 86 பல்கலைக்கழகங்களில் ஒன்பது பல்கலைக்கழகங்கள் இத்தகுதியை பெற்றுள்ளது. இதில் நான்கு மாநில பல்கலைக்கழகங்கள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அதிக பட்சமாக 3.64 புள்ளிகளை பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. துணைவேந்தர் சுப்பையா கூறும்போது, அகில இந்திய அளவில் ஏ பிளஸ் தகுதியை பிடித்துள்ள மற்ற மூன்று பல்கலைகள் முறையே 1950 முதல் 1970க்குள் ஆரம்பிக்கப்பட்டவை. ஆனால், காரைக்குடி அழக்ப்பா பல்கலைகழகம் மட்டுமே 1985ல் ஆரம்பிக்கப்பட்ட இளைய பல்கலைகழகமாக உள்ளது. இந்த தர மதிப்பீடானது. ஏழு ஆண்டு வரை இப்பல்கலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் ஆராய்ச்சி மேம்படும். யு.ஜி.சி.,யால் ஒதுக்கப்படும் நிதி கணிசமான அளவு உயரும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ