முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காட்டாங்குளத்தூர்  எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில்  ஜீனியர்களுக்கான மாநில அளவில்  கூடைபந்து போட்டி : அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ப்பு

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

+2 மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங் வகுப்பு வாரத்தில் மூன்று நாள் ஒரு மணி நேரம் அளிக்கப்படும். ஒன்றிய அளவில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் , அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆலோசனை வகுப்புகள் வழங்கப்படும். அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பரிசுகள்

காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் ஜீனியர்களுக்கான மாநில அளவில் கூடைபந்து போட்டி நடைபெற்றது. கல்லூரி தாளாளர் பச்சைமுத்து தலைமையில் நடந்த விழாவில் மாணவர் பிரிவில் 31 அணியும் , மாணவி பிரிவில் 29 அணியும் போட்டியிட்டன.  இந்த போட்டி இரவு பகல் நேரத்தில் நடைபெற்றது. புள்ளிகள் அடிப்படையில் வெற்றி தோல்விகள் அறிவிக்கப்பட்டது. முதல் இடத்தை சென்னையை சேர்ந்த மாணவர் அணியும் அதேபோல் மாணவி அணியும் பெற்றது.

மாணவர் அணியில் தூத்துக்குடி மாவட்டம் இரண்டாவது இடத்தையும் பெண்கள் பிரிவில் கோவை மாவட்டம் இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு கேடயம் , சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கிய பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. இந்த கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங் கிளாஸ் பள்ளியில் வகுப்பு முடிந்தபின் ஒரு மணி நேரம் அளிக்கப்படும். மத்திய அரசின் திட்டத்தை செயல்படும் வகையில் பள்ளி கல்விதுறை வாரத்தில் மூன்று நாள் +2 மாணவர்களுக்கு அவர்களின் நிலைகளுக்கு ஏற்றவாறு பயிற்சி அளிக்கபடும். மேலும் ஒன்றிய அளவில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் , அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஆலோசனை வகுப்புகள் வழங்கப்படும் என்றார்.

மேலும் கூறுகையில் +1 படிப்புகளுக்கு பொது தேர்வு குறித்து நாளை முதல்வர் பழனிசாமியுடன் பேசி முடிவு தெரிவிக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல், காஞ்சி மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் இராஜேந்திரன், ஆறுமுகம், காஞ்சி வழக்கறிஞர் பார்வேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago