பண்ருட்டியில் ரயில்வே மேம்பால பணி: சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      கடலூர்
railway bridge work mla visit

பண்ருட்டி ரயில்வே மேம்பால பணியை சத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.  நேரில் ஆய்வு செய்தார்.

 20 கோடி செலவில்

பண்ருட்டி சென்னை சாலையில் ரூ.20 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த பணிகளை பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யாபன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். இவருடன் பண்ருட்டி தாசில்தார் விஜய்ஆனந்த், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் கோதை ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது சத்யாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறியதாவது :

ரயில்வே பாலம்

பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்டங்கள் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. பொதுமக்களின் நலனைக்கருத்தில் கொண்டு தொகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகளை விரைந்துமுடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. வரும் காலங்களில் மேலும் பல புதிய திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் உறுதி

பண்ருட்டி மக்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றி தருவதாக தமிழக முதல்வர் உறுதியளித்துள்ளார் இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது முன்னாள் கவுன்சிலர்கள் ராஜதுரை, கோவிந்தன், ராமதாஸ், வேல்முருகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பெருமாள். திருவதிகை கலைவாணி சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து