முதுமலையில் வறட்சி நீங்கி பசுமை திரும்பியது வன உயிரினங்கள் நடமாட்டம் அதிகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 ஜூன் 2017      நீலகிரி
4ooty-4

முதுமலையில் வறட்சி நீங்கி பசுமை திரும்பியதையடுத்து வன உயிரிங்கனளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

320 சதுர கிலோ மீட்டர் காப்பகம்

நீலகிரி மாவட்டம் முதுமைலை புலிகள் காப்பகம் 320 சதுர மீட்டர் பரப்பளவை கொண்டதாகும். இங்கு வன உயிரினங்களான யானை, புலி, கரடி, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன உயிரிங்கள் வசிக்கின்றன. போதிய மழையின்மை காரணமாக சில மாதங்களாக வறட்சியின் பிடியில் சிக்கியிருந்த முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்த வன விலங்குகள் தண்ணீர் மற்றும் இரையுள்ள தேடி இடம்பெயர்ந்திருந்தன. இந்த நிலையில் முதுமலையில் தற்போது விட்டு, விட்டு மழை பெய்து வருவதால்
வறட்சி நீங்கி பசுமை திரும்பி வருகிறது. இதனால் தாவர உண்ணிகளான யானை, மான், காட்டெருமை போன்றவைகளுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீர் கிடைத்து வருகிறது.

புலியை காண ஆர்வம்

தற்போது சீசன் காலம் என்பதால் முதுமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்காக வன விலங்குகளை காண்பதற்கு ஏதுவாக வனத்துறை மூலம் வாகனத்தில் வனப்பகுதிக்குள் அழைத்துச்செல்லப்படுகின்றனர். அப்போது தென்படும் யானை, மான், கரடி, காட்டெருமை போன்ற வன விலங்குகளைக் கண்டு மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். ஆனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் புலியைக் காணவேண்டும் என ஆர்வமாக வருகின்றனர். புலிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ஒரு சில சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே புலிகளை காணும் வாய்ப்பு கிட்டுகிறது. 

யானை சவாரி ஆர்வம்

தற்போது முதுமலை புலிகள் காப்பகம் மழை பெய்து செழிப்பாக இருப்பதால் யானை, காட்டெருமை, மான் போன்ற வன உயிரினங்களை எளிதில் காண முடிகிறது. புலிகள் காப்பகத்தை காணவரும் சுற்றுலாப் பயணிகளுக்காக யானை சவாரியும் நடைபெற்று வருகிறது. யானை மீது சவாரி செய்தவாறே புலிகள் காப்பகத்தில் வலம் வரலாம். முதுமலை புலிகள் காப்பகத்தில் சில குறிப்பிட்ட இடம் வரை மட்டுமே சுற்றுலாப் பயணிகளை வாகனத்தில் அழைத்துச்சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட இடத்திற்கு வாகனத்தில் அழைத்துச்செல்லவும் அனுமதியில்லை. ஆனால் யானை மீது அமர்ந்து சவாரி செய்து வன விலங்குகளை காண்பது ஒர் புதிய அனுபவம் என்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து