முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் வே.சாந்தா தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      பெரம்பலூர்
Image Unavailable

பொதுமக்களின் கோரி;க்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் வே.சாந்தா. தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று(06.06.2017) நடைபெற்றது.

கோரிக்கை மனுக்கள்

இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவிற்கு பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களால் அனுப்பப்பட்டுள்ள மனுக்கள், வாரந்தோறும் நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், சிறப்பு மனுநீதி நாள் நிகழச்சிகளில் பொதுமக்களால் வழங்கப்படும் மனுக்கள் மீதும், அம்மா அழைப்பு மையம் மூலமாக வரப்பெற்றுள்ள கோரிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக மாவட்ட கலெக்டர் ஆய்வு நடத்தினார். பின்னர் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:

பொதுமக்கள் வழங்கும் அனைத்து மனுக்களின் விபரங்களும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு துறை அலுவலருக்கும் தனித்தனியே கடவுச்சொல் (Pயுளுளு றுழுசுனு) வழங்கப்பட்டுள்ளது. எனவே அனைத்துத் துறை அலுவலர்களும் தங்கள் துறைக்கு பொதுமக்களால் வழங்கப்படும் எந்த ஒரு மனுவிற்கும் முறையாக பதிலளிக்க வேண்டும். பொதுமக்கள் மனுவில் குறிப்பிட்டுள்ள கோரிக்கை ஏற்புடையதாக இருக்கும் பட்டசத்தில் உடனடியாக அதனை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்தஒரு மனுவையும் நீண்ட காலம் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களின் தனிப்பிரிவிற்கு வந்துள்ள கோரிக்கைகளின் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுத்து அதற்கான பதிலை ஆன்லைனில் பதிவிடவேண்டும். அதே போல அம்மா அழைப்பு மையத்திலிருந்து வரும் அழைப்புகளின் மூலம் வழங்கப்படும் மனுதாரரின் முகவரி மற்றும் தொடர்பு எண்ணைப்பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட மனுதாரரை தொடர்புகொண்டு அவரது கோரிக்கைகளை முழுமையாக கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு அலுவலர்களை தேடி வரும் பொதுமக்களின் கோரிக்கைகளை அரசு அலுவலர்கள் கனிவுடன் பரிசீலனை செய்து முடிந்தவரை அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மனோகரன், மகளிர்திட்ட அலுவலர் செல்வராசு உள்ளிட்ட வட்டாட்சியர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து