முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்டம் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் மாணவ மாணவிகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், முன்னிலையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார்.

பேரணி

இப்பேரணி மயிலாடுதுறை டி..எல்.சி தொடக்கப்பள்ளியிலிருந்து தொடங்கி, மயிலாடுதுறை நகராட்சி பூங்காவைச் சென்றடைந்தது..பேரணியில் அனைத்து ஒன்றிய தொடக்கக் கல்வி அலுவலர்கள், மயிலாடுதுறை ஒன்றிய பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர்கள் உள்ளிட்ட சுமார் 350 பேர் பங்கேற்றனர். பேரணியை துவக்கி வைத்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்; தெரிவித்ததாவது, " தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் கடந்த 7 ம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.. அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசுப்பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கிடவும், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்திட அவர்களிடம் விழ்ப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்படுகிறது.

தமிழக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம், கணித உபகரணப் பெட்டி உட்பட 14 வகையான உபகரணங்கள் வழஙகுதல்;, ஏழை மாணவர்களும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குதல் உள்ளிட்ட பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மாணவ மாணவிகளை தேர்ச்சியடைய வைத்தால் மட்டும் போதும் என்று இல்லாமல், அரசுப் பள்ளிகளிலும் மாணவ மாணவிகளின் கல்வித் திறனையும், பிற திறமைகளையும் வெளிக்கொணரும் வண்ணம் சிறப்பு வகுப்புகளும், பிற பயிற்சி வகுப்புகளும் நடத்தப் படுகின்றன.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள் உயர்ந்த நிலையை எட்டியுள்ளார்கள். தனியார் பள்ளிகளை வி;ட அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. கண்டிப்பாக நம் மாணவர்களுக்கு நுண்ணறிவு அதிகமாக இருக்கிறது. அதனை மென்மேலும் வளர்த்துக் கொண்டு கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் அரசுப்பள்ளிகளில் வகுப்பறை, தூய்மையான குடிநீர், ஆய்வகங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்பத்தப்பட்டுள்ளன.. எனவே பெற்றோர்களும், பொதுமக்களும தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும"; என தெரிவித்தார்.

இப்பேரணியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கே.பாரதிமோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்பவுன்ராஜ்(பூம்புகார்), பி.வி.பாரதி(சீர்காழி),வி.இராதாகிரஷ்ணன்(மயிலாடுதுறை), மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் எம்.சந்திரன், மாவட்;ட தொடக்கக் கல்வி அலுவலர் எஸ்.ஆஷா கிறிஸ்டி, அனைத்து ஒன்றிய தொடக்கக் கல்வி அலுவலர்கள், மயிலாடுதுறை ஒன்றிய பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து