முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரம் மாவட்டம் உயிரின குழுமத்திரடு தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறால்கள் அறுவடை திருவிழா : அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த வாணியஞ்சாவடியில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் உயிரின குழுமத்திரடு தொழில்நுட்பத்தில் வளர்க்கப்பட்ட இறால் அறுவடைத் திருவிழா நடைபெற்றது. மீன்வளம் மற்றும் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அவர்கள் அறுவடை செய்த இறால்களை விநியோகம் செய்தார்.

சுற்றுச்சூழல்

முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா மீன்வளத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மீனவர்களின் வாழ்வதாரத்தை முன்னேற்றமடைய செய்தார்கள். அவர் காட்டிய வழியில் செயல்படும் தமிழக அரசின் மீன்வள பல்கலைகழகம் அம்மாவின் கனவை நிறைவேற்றும் வகையில் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கேற்ப புதிய தொழில்நுட்பத்தில் இறால்களை வளர்த்து சாதனை படைத்துள்ளார்கள்.

நமது மீன்வளத்துறை சார்ந்த அமைப்புகள் மற்றும் கல்லூரிகள் சிறப்பான தொழில்நுட்ப பயன்படுத்தி இறால் வளர்ப்பை சுற்றுச்சூழலுக்கு சாதகமான முறையிலும் நிலையான முறையிலும் இலாகபரமான முறையிலும் வளர்க்க முடியும் என்பதை நிறைவேற்றியும் உள்ளது.

க்ஷiடிகடடிஉ வநஉhnடிடடிபல என்பது சுற்றுச்சூழலுக்கு சாதகமான அணுகுமுறைகளை மேற்கொண்டு இறால் வளர்ப்பு குளங்களில் உருவாகும் நைட்ரஜன் வளர்சிதை மாற்றப்பொருட்களான அம்மோனியா, நைட்ரைட் அளவுகளை நுண்ணுயிரிகளின் உதவியோடு வளர்ப்பு குளத்திலேயே கணிசமான அளவில் குறைக்கும் தொழில்நுட்பமாகும். இத்தொழில்நுட்பம் கழிவுகளை குளத்திலேயே தக்கவைத்து உணவாக கிடைக்கச் செய்யும். மேலும், இந்த தொழில்நுட்பமுறையில் குளத்தில் உருவாகும் நுண்ணுயிரி புரதங்களை இறால்களுக்கு உணவாக பயன்படுவதால் இறால் வளர்ப்பில் தேவைப்படும் உள்ளீட்டு செலவுகளான தீவனச்செலவுகள் பெருமளவில் குறைக்கப்படுகிறது.

இறால் வளர்ப்பில் நோய் கிருமிகளின் தாக்கம் அதிகம். இந்த க்ஷiடி கடடிஉ முறையில் இறால் வளர்ப்பை மேற்கொள்ளும் போது அது இறால்களை தாக்கக்கூடிய கொடிய நோய்கிருமிகளை தாக்கத்தை குறைப்பதோடு, அதிக வருமானத்தை ஈட்டி தருவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

கிராமப்புறத்தில் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் இதனை இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாநிலத்தில் 65 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அனைவருக்கும் அரசு வேலை என்பது கடினம். கூட்டுப்பன்ணை விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு மானியத்துடன் கடனுதவி கிடைக்கிறது. இளைஞர்கள் புதிய தொழில்நுட்ப முறையில் இறால்கள் வளர்ப்பதன் மூலம் நல்ல பொருளாதார வளர்ச்சியை காண முடியும். மானாவாரி நிலங்களில் இத்தகைய இறால் வளர்ப்பு சிறந்த வருமானம் ஈட்டும் தொழிலாகும். இளைஞர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என தெரிவித்தார்.

முன்னதாக "உயிரின குழுமத்திரடு தொழில்நுட்பத்தின் மூலம் ஆரோக்கியமான இறால்கள் உற்பத்தி" எனும் தலைப்பில் விவரங்கள் அடங்கிய பிரசுரத்தை மீன்வளம் மற்றும் நிதித்துறை அமைச்சர் திரு.டி.ஜெயக்குமார் அவர்கள் வெளியிட அதனை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலு, சட்டமன்ற உறுப்பினர் எம்.கோதண்டபாணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து