முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஞ்செட்டி, தளி, கெலமங்கலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் 499 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: துணை சபாநாயகர் மு.தம்பிதுரை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      கிருஷ்ணகிரி

 

அஞ்செட்டி, தளி, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 499 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரத்து 556 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை இன்று (11.06.2017) வழங்கினார்.

நலத்திட்ட உதவி

அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்து முகாமை துவக்கி வைத்து அம்மா ஆரோக்கிய திட்ட அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மற்றும் கெலமங்கலம், தளி, ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், வறட்சியின் காரணமாக ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் பணிகள் குறித்து நாடாளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை இன்று (11.06.2017 ) அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி , கலெக்டர் சி.கதிரவன் , பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் 13.20 லட்சம் மதிப்பில் அஞ்செட்டி பேரூந்து நிலையம் அருகே புதிய கழிப்பறை கட்டுமான பணிகளை துவக்கி வைத்து 499 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரத்து 556 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நடாளுமன்ற துணை சபாநாயகர் அஞ்செட்டியில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றும் போது:மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மா சீரிய முயற்சியால் தருமபுரி மாவட்டம் இரண்டாக பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டம் தனியாக பிரித்து வழங்கினார்கள். இதனால் மிகவும் பின் தங்கிய பகுதியாக இருந்த கெலமங்கலம், தளி, அஞ்செட்டி, ஆகிய பகுதிகள் இன்றைக்கு சாலை வசதி, போக்குவரத்து வசதி போன்ற அடிப்படை வசதிகளுடன் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தளி வட்டாரத்தை இரண்டாக பிரித்து அஞ்செட்டியில் புதிய வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைக்க நடைவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிக்கு சிறிய பேருந்துகள் இயக்கவும், கூடுதலாக உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தவும், மலை வாழ்பகுதி மாணவ மாணவியர்கள் பயன் பெறும் வகையில் அரசு பெண்கள் கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இந்த பகுதி வளர்ச்சி அடைய அம்மா பல முறை பாரதபிரதமர் அவர்களிடம் தொடர் கடிதம் எழுதி வலியுறுத்தியதின் விளைவாக விமான போக்கு வரத்து சேவை வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. விரைவில் விமான சேவை தொடங்கும் போது இன்னும் இப்பகுதி வேகமாக வளர்ச்சி பெறும்.

குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்காக உயர் மட்ட தொட்டிகள் கட்டி தடையில்லா குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பகுதி மக்கள் வைத்துள்ள கோரிக்கை மனுக்கள் அனைத்தும் குறிப்பாக ஆதிதிராவிடர் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்று மட்டும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 64 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 11 ஆயிரத்து 500 மதிப்பில் வீட்டு மனை பட்டாக்களும், 135 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 16 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் ஓய்வூதியமும், 24 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளும், வேளாண்மை துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 1 லட்சத்து 62 ஆயிரத்து 150 மதிப்பில் வேளாண் இடுப்பொருட்களும், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 130 தாய்மார்களுக்கு ரூ. 32 லட்சத்து 30 ஆயிரத்து 400 மதிப்பிலான காசோலையும், இரண்டு பெண்களுக்கு ரூ. 22 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரமும், 28 - பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான பசுமை வீடுகள் கட்ட ஆணையும், 17 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான ஆணைகளையும், தோட்டக்கலைத் துறை சார்பில் சொட்ட நீர் பாசன கருவி 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 606 மதிப்பிலும், விவசாய பயிர் கடன் 22 பயனாளிகளுக்கு ரூ. 16 லட்சத்து 54 ஆயிரத்து 900 மதிப்பிலும், மலை வாழ் மக்களுக்கு வனத் துறை சார்பில் பங்கு தொகையாக 55 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலும், மொத்தம் 499 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரத்து 556 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை இன்று (11.06.2017) வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நரசிம்மன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர்கள் மகேஸ்குமார், துணை இயக்குநர் ( சுகாதார பணிகள்) மரு.பிரியாராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, தனி துணை கலெக்டர் வசந்தா, பன்னீர் செல்வம், உதவி இயக்குநர் ( ஊராட்சிகள்) லட்சுமணன், மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், வேளாண்மை துறை உதவி இயக்குநர் ஏ.சண்முகம், தருமபுரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் எஸ்.தென்னரசு, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.என்.ஏ. கேசவன், தருமபுரி கூட்டுறவு ஒன்றிய தலைவர் நாராயணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கோவிந்தராஜ்,முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர்கள் ஆர்.ஜெயபால், மது (எ) ஹேம்நாத், முனியப்பன், கோட்டமடுவு கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.ராஜப்பா, நாராயணசாமி, பசுபதி, மஞ்சுநாத், ஜாகீர் உசேன், தேன்கனிக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சேம்கிங்ஸ்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணபவா, வட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், லட்சுமி, மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து