ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் பா.ஜ. அரசு படுதோல்வி: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      அரசியல்
congress

புதுடெல்லி, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று பாரதிய ஜனதா அளித்த உறுதிமொழியை நிறைவேற்றாமல் தோல்வி அடைந்துவிட்டது என்று காங்கிரஸ் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளது.

மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு வருடந்தோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று பாரதிய ஜனதா தேர்தல் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேலைவாய்ப்பில் பாரதிய ஜனதா கவனம் செலுத்தவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகின்றன. இதனையடுத்து கடந்த 3 ஆண்டு பா.ஜ. ஆட்சியில் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டது தொடர்பாகவும் இனிமேல் வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்தும்  நிதி ஆயோக் மற்றும் மத்திய அரசின் ஆலோசகர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி விரைவில் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தநிலையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் மத்தியில்  பிரதமர் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது என்றும் இனிமேல் பா.ஜ. தலைவர்கள் அமீத்ஷா போன்றவர்கள் வாக்குறுதி எதுவும் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கிண்டல் அடித்துள்ளது.

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி வாஷிங்டன்னில் அதிபர் டிரம்பை சந்தித்து பேச உள்ளார். அப்போது எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்க நிர்வாகம், இந்தியர்கள் பாதிக்காமல் இருக்க சாதகமான உறுதிமொழியை பெற்றுவர வேண்டும். வெறும்கையோடு மோடி திரும்பக்கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான ஆனந்த சர்மா கேட்டுக்கொண்டுள்ளார். வேலைவாய்ப்பு தொடர்பாக நிதி ஆயுக் மற்றும் மத்திய அரசின் நிர்வாக ஆலோசகர்கள் கூட்டத்தை பிரதமர் கூட்ட முடிவு செய்திருப்பது மிகவும் காலதாமதமானதாகும். மேலும் வேலைவாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது என்பதை பிரதமர் உணர்ந்திருப்பதை இது காட்டுகிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கவில்லை என்று பா.ஜ. தலைவர் அமீத்ஷா கூறியிருப்பதை பிரதமர் மோடி ஒப்புக்கொள்கிறாரா? இல்லையா? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். அமைதியாக இருக்கக்கூடாது. அமீத்ஷா சொன்னது உண்மைதான் என்று பிரதமர் ஒப்புக்கொண்டால் மீண்டும் மக்களை ஏமாற்றுவதாக அது இருக்கும் என்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆனந்த சர்மா கூறினார்.

பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவீசுவதை பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ள வேண்டும். மோடியின் கடந்த 3 ஆண்டு கால ஆட்சியானது விளம்பத்திலும் பிரசாரத்திலுமே முடிந்துவிட்டது என்றும் சர்மா மேலும் கூறினார். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து