எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவள்ளூர், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. நம் கூட்டணி வெற்றிக் கூட்டணி என திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போன் என்ற பெயரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் பிரசாரம் மேற்கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-
தி.மு.க. என்ற இஞ்ஜின் இல்லாத காரை கூட்டணி என்ற லாரி 10 ஆண்டுகளாக இழுத்துச் செல்கிறது. அ.தி.மு.க.வை சிலர் விமர்சனம் செய்கின்றனர். அ.தி.மு.க.தான் எதிரிகளை வீழ்த்தும் பலமான கட்சி. தி.மு.க. கூட்டணி வைத்தபோது பாஜக நல்ல கட்சி. அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா?
56 மாதங்கள் விவசாயிகளுக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் தி.மு.க. எதையும் செய்யவில்லை. தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெரும். அ.தி.மு.க. அழுத்தம் கொடுத்ததால் 100 நாள் வேலையை 125 நாட்களாக மத்திய அரசு அறிவித்தது. தி.மு.க. கூட்டணியில் புகைச்சல் கிளம்பிவிட்டது. வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு கட்டிகள் ஆட்சியில் பங்கு கேட்கின்றனர்.
இந்தியாவிலேயே கடன்வாங்குவதில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. தமிழக மக்களை கடனாளிகளாக்கி விட்டார் முதல்வர். கடனை செலுத்த வரி போடுவார்கள். அது மக்கள் தலையில்தான் வந்து விழும். கடனை குறைக்க நிதி மேலான்மை குழு அமைத்த பின்பு இன்னும் அதிகமாக கடம் வாங்கி இருக்கின்றனர். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. நம் கூட்டணி வெற்றிக் கூட்டணி. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


