இனி ஏழுமலையானை தரிசிக்க ஆதார் அட்டை கட்டாயம்

சனிக்கிழமை, 24 ஜூன் 2017      ஆன்மிகம்
tirupati 2017 04 14

திருப்பதி, ஏழுமலையானைத் தரிசிக்க ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜூ தெரிவித்துள்ளார்.

உலக பிரசித்திபெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தீவிரவாதிகளின் அச்சறுத்தலை முன்கூட்டியே தடுக்கும் வகையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை கொண்டுவர வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஆதார் அட்டை:-

இதுகுறித்து திருமலையில்  தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு, நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் அனைத்து சேவைகள், தரிசனம், தங்கும் அறைகளுக்கும் ஆதார் அட்டை கட்டயமாக்கப்படும். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.

பட்டுப்புடவை:-

இதற்கிடையே ஆந்திராவின் சிரிசில்லா பகுதியைச் சேர்ந்த நெசவு தொழிலாளரான விஜய் என்ற பக்தர், திருப்பதி ஏழுமலையானுக்கு  தீப்பெட்டிக்குள் அடங்கும் மெலிதான பட்டுப்புடவையை காணிக்கையாக வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து