ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டால் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழப்பார்கள்: ஜி.கே.வாசன்

புதன்கிழமை, 28 ஜூன் 2017      அரசியல்
GK Vasan(N)

சென்னை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டால் லட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலை இழக்கும் வாய்ப்பு உருவாகும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 ஜவுளித் தொழிலில் 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும். ஜி.எஸ்.டி. முறையினால் நூல் கொள்முதல் முதல் துணிகளை முழு உற்பத்தி செய்யும் வரை ஒவ்வொரு நிலையிலும் வரி விதிப்பு விதிக்கப்படுகிறது. இதனால் ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டு, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலை இழக்கும் வாய்ப்பு உருவாகும்.

மேலும் விசைத்தறி உரிமையாளர்கள், தறி நெய்வோர், சிறு வியாபாரிகள், கூலித் தொழிலாளிகள் என ஜவுளித் தொழிலை நம்பியுள்ளவர்கள் அனைவருமே பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே மத்திய பா.ஜ.க. அரசு ஜவுளித்தொழிலுக்கான சரக்கு மற்றும் சேவை வரியில் ஜவுளித்தொழில் துறையில் ஈடுபட்டுள்ளோரின் நியாயமான கோரிக்கையை ஏற்று செயல்படுத்த வேண்டும். மேலும் கிரைண்டர் மற்றும் அதற்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிலில் 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டால் இதனை உற்பத்தி செய்பவர்கள், இத்தொழிலைச் சார்ந்துள்ள சிறு குறு தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய பா.ஜ.க அரசு சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை அமல்படுத்துவதில் அவசரம் காட்டக்கூடாது. தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என த.மா.கா. வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து