தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பொது சுகாதார பணிகள் கலெக்டர் என்.வெங்கடேஷ் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      தூத்துக்குடி
tuty collector 2017 07 02

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பொது சுகாதார பணிகள் மற்றும் 4வது பைப் லைன் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் என்.வெங்கடேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

 சுகாதார பணிகள்

மாநகராட்சி ஸ்டேட் பாங்க் காலனியில் மத்திய அரசின் அம்ரித் திட்டத்தின் கீழ் ரூ.137 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பூங்கா பணிகளையும், புதிய பேருந்து நிலையம், போல் பேட்டை மற்றும் பிரையண்ட் நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் சுகாதார பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும்  மடத்தூர் மற்றும் கணேஷபுரத்தில் தலா ரூ.62 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நகர் நல மையத்தையும், ரூ.150 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தூத்துக்குடி மாநகராட்சி 2ம் தள அலுவலக கட்டுமானப் பணிகளையும், டூவிபுரம் 4 வது தெரு, கணேஷ்நகர், மடத்தூர் பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கலெக்டர் ஆய்வு

தூத்துக்குடி மக்களின் குடிநீர் தேவையை போக்கும் பொருட்டு அமைக்கப்பட்டு வரும் 4வது பைப்லைன் திட்டப்பணிகளையும்; ஆய்வு செய்தார். மேலும் தூத்துக்குடி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து கட்டுமானப்பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் டாக்டர்.அல்பி ஜான் வர்கீஸ், மாநகராட்சி செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து