முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயற்கை மருத்துவன் பாகற்காய்

திங்கட்கிழமை, 3 ஜூலை 2017      மருத்துவ பூமி
Image Unavailable

பாகற்காய் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. இதன் தாவரவியல் பெயர் மோமோர்டிக்கா சாரன்சியே  என்பதாகும். இவை பூசனிக்காய் குடும்பத்தைச்  சேர்ந்த குக்குர்பிட்டேசிய என்னும் செடி கொடி வகையைச் சேர்ந்ததாகும். பாககற்காயில் உள்ள கசப்பு சுவை உடல் நலத்திற்கு உகந்த உணவாக கருதப்படுகிறது. பாகற்காயின் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவிலிருந்து சீனாவிற்கு 14-ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. பாகற்காய் வளரும் மண்ணிற்கு ஏற்ப கரும்பச்சை நிறமாகவோ அல்லது இளம்பச்சை நிறமாகவோ இருக்கும். பாகற்காயில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்டுகள், விட்டமீன்கள் ஏராளமாக உள்ளது. பாகற்காயில் சக்கரை, நார்பொருட்கள், கொழுப்பு, புரதம், நீர், விட்டமீன் ஏ, தயமின், ரிபோஃபிளாவின், நியாசின், பான்டோதெனிக் அமிலம், விட்டமின் பி6,விட்டமின் பி9, விட்டமின் சி. விட்டமின் ஈ, விட்டமின் கே, கால்சியம், இரும்ப, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் ஆகிய  விட்டமின்கள் உள்ளன.

குழந்தைகள் முதல் சர்க்கரை நோயாளிகள் வரை அனைவரும்; இதனை பாகற்காய் ஜுஸ், ஊருகாய், பொறியல், வருவல், கொக்கு, குழம்பு, கூட்டு என ஏராளமான வகையில் பயன்படுத்தலாம். பாகற்காய் உண்பதால் சேதமடைந்த உள்ளுருப்புகள் பாககற்காயில் உள்ள விட்டமின்கள் மூலம் பழுது பார்க்கப்பட்டு நோய்கள் குணமாக்கப்படுவதாக மருத்துவ ஆய்வில் தெரிவிக்கின்றன. பாகற்காயின் பச்சை சாற்றை உண்பதால் ஆக்சிசனேற்ற அயற்சி, கல்லீரல் சிதைவு, இழைநார்ப் பெருக்கம் போன்ற நோய்கள் தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகளில் கூறுகின்றன. பாகற்காய் செம்படம்பர் மாதம் முதல் நவம்பர் வரை அறுவடை நடைபெறும். பாகற்காயை வேளான்மை துறையினர் இருவகை இனங்களாக விளைவிக்கின்றனர். சாதாரன பாகற்காய், குருவி தலை பாகற்காய் பிரிக்கப்படுகிறது. பாகற்காய் வங்கதேசத்திலும் பயிரிடப்;படுகிறது. பாகற்காயில் உள்ள கசப்பு, சுவை உடல்நலத்திற்கு உகந்த உணவாக கருதப்படுகிறது. இதனை சர்க்கரை நோயாளிகள் உட்கொண்டால் ரத்த சர்க்கரை அளவு குறையும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். உணவே மருந்து, மருந்தே உணவு என்ற சித்த வைத்தியத்தின் கூற்றுப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பயன்படுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியம் அடையும் என சித்த மருத்தவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர் ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கு உட்பட்ட சத்திரப்பட்டி, விருப்பாட்சி, தாசரிபட்டி, புதுக்கோட்டை, சிந்தலவாடம்பட்டி, தேவத்தூர், கொத்தயம், 16-புதூர் ஆகிய ஊர்களில் ஏராளமான விவசாயிகள் பாகற்காய் நடவு செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து