முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் ஓவன் கூப்பருக்கு எம்மி விருது

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2025      உலகம்
USA 2025-09-15

Source: provided

அமெரிக்கா : நடிகர் ஓவன் கூப்பருக்கு எம்மி விருது வழங்கப்பட்டது.

நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடர் அடோலசென்ஸ். குழந்தை வளர்ப்பு மற்றும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிகள் குழந்தைகளை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை 4 எபிசோடுகளில் பேசிய இத்தொடருக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் கிடைத்தன. ஆச்சரியப்படுத்தும் வகையில், ஒட்டுமொத்த தொடரும் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டதால் அசாத்திய உருவாக்கம் என்கிற புகழையும் பெற்றது.

தொடரின் மையக் கதாபாத்திரமாக நடித்த நடிகர் ஓவன் கூப்பர் தன் முதிர்ச்சியான நடிப்பால் ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருப்பார். முக்கியமாக, உளவியல் நிபுணருடன் பேசும் காட்சியில் தொடர் வசனங்களைப் பேசிவிட்டு மேஜையில் ஓங்கித்தட்டும் காட்சி புல்லரிப்பைக் கொடுத்தது.

இந்த நிலையில், இந்தாண்டு எம்மி விருதுகள் நிகழ்வில் அடொலசென்ஸ் தொடருக்காக சிறந்த துணை நடிகருக்கான விருது 15 வயதான ஓபன் கூப்பருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதின் மூலம், மிக இளவயதிலேயே எம்மி விருதை வென்ற ஆண் என்கிற சாதனையையும் படைத்துள்ளார். நிகழ்வில் பேசிய ஓவன், “நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நான் ஒன்றுமில்லாமல் இருந்தேன். இப்போது, எம்மி கிடைத்திருக்கிறது. என்னால் நம்ப முடியவில்லை. என் பெற்றோருக்கும் அடோலசென்ஸ் குழுவினருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார். இந்த விருதுக்காக ஓபனின் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து