Idhayam Matrimony

சக்தி திருமகன் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2025      சினிமா
Sakthi-Thirumagan 2025-09-1

Source: provided

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன்னனோட்டம்  வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவில், ஷோபா சந்திரசேகர் பேசுகையில், “விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர். முதன் முதலாக சுக்ரன் படத்தில் என்னுடைய கணவர் தான் இவரை அறிமுகப்படுத்தினார். அப்போது வேறு பெயரை வைத்துக் கொண்டு வந்தார். என்னுடைய கணவர் தான் விஜய் ஆண்டனி என்று பெயர் வைத்தார். அவர் ஒவ்வொரு படங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்றார். பின்னர் விஜய் ஆண்டனி பேசுகையில், நேற்று தான் ’நான்’ படத்தில் நடித்தது போல் உள்ளது. 25 படங்கள் என்பது நான் நாயகனாக நடித்த படங்களை மட்டும் குறிப்பிடவில்லை, நான் சிறு கதாபாத்திரங்களில் நடித்த படங்களையும் சேர்த்து தான் 25 வது படம் என்று குறிப்பிட்டுள்ளோம்.  அருண் கதை சொல்லும் போது அவரை மலைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். முதல் பாதி சொல்லும் போது இப்படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்று உணர்ந்தேன். நான் எப்போதும் மீடியம் பட்ஜெட் படங்களில் தான் நடித்து வந்துள்ளேன். ஆனால் இப்படத்தின் இரண்டாம் பாதியை கேட்டவுடன் பிரமித்துவிட்டேன். ஏனென்றால், இரண்டாம் பாதி முழுக்க முழுக்க அரசியல் களத்தில் உள்ளது. பெரிய பட்ஜெட், அரசியல் படம் என்று யோசனை வந்தாலும், இப்படத்தை நடித்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். 4 வருடம் எனக்காக காத்திருந்து ஒரு கதை அமைத்ததற்கு பிரபுவிற்கு நன்றி என்றார். இப்படம் விஜய் ஆண்டனியின் 25வது படம். இப்படத்தை அருண் பிரபு இயக்கியிருக்கிறார். இசையை விஜய் ஆண்டனியே அமைத்திருக்கிறார். நாயகி திருப்தி இப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து