முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே இரவில் 245 மிமீ மழை: ஐதராபாத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர்

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2025      இந்தியா
TN 2024 11 20

Source: provided

தெலங்கானா : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை மழை கொட்டித் தீர்த்தது. சித்திபேட்டையில் உள்ள நாராயண்ராவ்பேட்டை பகுதியில் அதிகபட்சமாக 245.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள தட்டியன்னாரம் பகுதியில் 128 மிமீ, முஷீராபாத் பகுதியில் 114.5 மிமீ மழையும் பெய்துள்ளது.

தெலங்கானாவில் இந்த கனமழையால் அங்குள்ள சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் மாநகராட்சியும் போக்குவரத்து காவல்துறையினரும் இதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ள நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளம் அதிகமுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பர்சிகுட்டாவில் வடிகால் சுவர் இடிந்து விழுந்ததில், 2 குழந்தைகளுக்குத் தந்தையான சன்னி என்பவர் அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல நம்பள்ளி பகுதியில் அர்ஜுன்(26), ராமா(28) ஆகிய இருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஐதராபாத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்குள்ள பல கடைகளில் வெள்ளம் புகுந்து பொருள்கள் சேதமாகியுள்ளன. மிகவும் மோசமான வடிகால் அமைப்பு முறையே இவ்வளவு பாதிப்புகளுக்கு காரணம் என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். முன்னதாக தெலங்கானாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து