முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான்: 'அன்பு கரங்கள்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2025      தமிழகம்
CM-1-2025-09-15

சென்னை, அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி. அரசியல் என்றால் பலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஏதோ, ஆட்சிப் பொறுப்புக்கு வந்தோம்; பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம்; சில கவர்ச்சித் திட்டங்களை செய்தோம்; மறுபடியும் பதவி மோகத்தோடு தேர்தலுக்கு தயாராவோம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், எங்களுடைய அடிப்படையே, “பதவி அல்ல; பொறுப்பு” தான். அதிகாரம் என்பது சாமானியனுக்காக போராடுவது என்று அன்பு கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கவலைப்பட வேண்டாம்...

முதல்வர்  மு. க. ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், “அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்து, ஆற்றிய உரையில் கூறியதாவது:- எப்படி இருக்கிறீர்கள்? நன்றாக இருக்கிறீர்களா? உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். இனிமேல், நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களை இன்னும் கவனித்துக் கொள்ளத்தான் இந்த அன்புக் கரங்கள் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். நான் இருக்கிறேன்… உங்களை பத்திரமாக பார்த்துக் கொள்வேன்.

செலுத்துகின்ற மரியாதை...

இன்றைக்கு மிகவும் முக்கியமான நாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் நம்முடைய தாய் நிலத்துக்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தலைமகன் அவருடைய பிறந்த நாள். “ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்று திராவிட மாடல் ஆட்சிக்கு இலக்கணம் எழுதிய மாபெரும் தலைவரின் பிறந்தநாள். இன்று, (நேற்று) இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து, இங்கு பேசிய குழந்தைகளின் சிரிப்பு தான் அண்ணா அவர்களுக்கு நாங்கள் செலுத்துகின்ற மரியாதை. மிகுந்த மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அடைந்து கொண்டிருக்கிறேன்.

மக்களுடைய குரலாக....

திராவிட மாடல் என்றால் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்று எளிமையாக விளக்கம் சொல்லிவிடலாம். ஆனால், எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பது உழைப்பதும், பாடுபடுவதும் எளிதானது அல்ல. இந்திய சமூகச் சூழலில், இவர்களுக்கெல்லாம் எதுவுமே தெரியாது - தெரியக் கூடாது என்று ஒடுக்கப்பட்ட சாமானிய மக்களின் எழுச்சிதான், திராவிட இயக்கம். அதனால்தான், மக்களோடு மக்களாக, மக்களுடைய குரலாக திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு ஒலித்துக் கொண்டிருக்கிறது.

எப்போதும் மக்களோடு... 

மக்களுடைய தேவைகளை, இந்த சமூகத்துக்கு தேவையான மாற்றங்களை, ஆட்சிப் பொறுப்பைப் பயன்படுத்தி இன்றைக்கு நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி. எங்களைப் பொறுத்தவரைக்கும், இங்கே சொகுசுக்கு இடமில்லை. நீங்களே பார்த்துக் கொண்டிருப்பீர்கள். காலையில் ஒரு இடத்தில் மக்கள்கூட பேசிக் கொண்டிருப்பேன். ஈவினிங் பல நூறு கிலோ மீட்டர் கடந்து இன்னொரு ஊரில்… இன்னொரு பகுதியில் மக்கள்கூட இருப்பேன். இந்த உழைப்பைத்தான், தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர், எங்களுக்கு கற்றுத் கொடுத்திருக்கிறார்கள். இப்படி எப்போதும் மக்களோடு மக்களாக இருக்கின்ற காரணத்தால்தான், கடைக்கோடி மனிதருக்கும் என்ன தேவை என்று பார்த்துப் பார்த்து எங்களால் செய்ய முடிகிறது.

அரசியல் என்றால்... 

அரசியல் என்றால் பலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஏதோ, ஆட்சிப் பொறுப்புக்கு வந்தோம்; பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம்; சில கவர்ச்சித் திட்டங்களை செய்தோம்; மறுபடியும் பதவி மோகத்தோடு தேர்தலுக்கு தயாராவோம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், எங்களுடைய அடிப்படையே, “பதவி அல்ல; பொறுப்பு” தான். அதிகாரம் என்பது சாமானியனுக்காக போராடுவது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து