முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை 6-வது லீக்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2025      விளையாட்டு
INDIA 2024-06-21

Source: provided

துபாய் : ஆசிய கோப்பை 6-வது லீக் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் 47 ரன்னுடனும், சிவம் துபே 10 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தனர். 

முதலில் பேட்டிங்...

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இந்த தொடரின் 6-வது நாளான நேற்று துபாயில் நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து பாகிஸ்தானின் தொடக்க வீரர்களாக சாஹிப்சாதா பர்ஹான் மற்றும் சைம் அயூப் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாஹிப்சாதா பர்ஹான் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

128 ரன்கள் இலக்கு...

இதில் முகமது ஹாரிஸ் 3 ரன், பக்கார் ஜமான் 17 ரன், சல்மான் ஆகா 3 ரன், ஹசன் நவாஸ் 5 ரன் எடுத்து அவுட் ஆகினர். சைம் அயூப், முகமது நவாஸ் இருவரும் ரன் எடுக்காமல் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், அக்சர் படேல், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 128 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது.

இந்தியா அபார வெற்றி...

தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். கில் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா அதிரடியுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா நிதானமாக விளையாடி 31 ரன்கள் சேர்த்து அவுட்டானார். இறுதியில் இந்திய அணி 15.5 ஓவர்களில் இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் 47 ரன்னுடனும், சிவம் துபே 10 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தனர். 

ஹர்திக் பாண்ட்யா சாதனை

பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் முதல் பந்திலேயே பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் சைம் அயூப்பின் விக்கெட்டை ஹர்திக் பாண்ட்யா கைப்பற்றினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஆட்டத்தின் முதல் பந்திலேயே விக்கெட் கைப்பற்றிய 2-வது இந்திய பவுலர் என்ற மாபெரும் சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார். இதற்கு முன்னர் அர்ஷ்தீப்சிங், கடந்த ஆண்டு அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி இருந்தார். 

ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்திய அணியின் வெற்றியை நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். ஜம்முவிலும் வெற்றிக் கொண்டாட்டம் களை கட்டியது. பாட்னா, வாரணாசி, அகமதாபாத் என பல இடங்களிலும் திரண்ட ரசிகர்கள் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு, இந்திய அணி வெற்றி பெற்றது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து