Idhayam Matrimony

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2025      இந்தியா
Nakselit

Source: provided

ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாத் மாவட்டம் பண்டிட்ரு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று காலை அந்த வனப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப்படையினர் நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த பதிலடி தாக்குதலில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட சகாதேவ் சோரன் என்ற மாவோயிஸ்டும் அடக்கம் என தெரியவந்துள்ளது. மேலும், என்கவுன்டர் நடைபெற்ற பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து