பதில் சொல்லும் பொறுப்பு ஓருவரை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது: “சிந்திக்காதவாழ்க்கை,வாழ்வதற்குத் தகுதியானதல்ல.” -சாக்ரடீஸ்

செவ்வாய்க்கிழமை, 1 ஆகஸ்ட் 2017      மாணவர் பூமி
pathilsollum

Source: provided

பதில் சொல்லும் பொறுப்பு என்பது பொறுப்பு உணர்வுடன் தொடர்புடையதாகும்.  அது ஒருவருடைய பொறுப்புணர்வின்  ஆழத்தை அளந்து கணித்துவிடுகிறது. பதில் சொல்லும் பொறுப்பு, பொறுப்புக்களின் அடிப்படையில் ஒருவர் பெறும் வெற்றியைத் தொடர்ந்து மதிப்பீடு செய்கிறது. தனது வெற்றியை தக்கவைத்துக் கொள்ளவே முற்படுகிறது.

மேலும் தன்னை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்வதும் இந்த பொறுப்புணர்வே. அதே நிலையில் அவர் தோல்வியைத் தழுவுகிறபோது, தோல்விக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு ஆட்படுகிறது. தோல்வியின்போதுதான் தன்நிலையறிந்து நிதானத்துடன் செய்படுகிறது.  பிறர் மீது பழி போடுவதற்குரிய வழிவகைகளை அது தேடுவதில்லை. யாரையாவது கைகாட்டிவிட்டு நாம் தப்பித்துவிடலாம் என்றும் யோசனை செய்வதில்லை.  தவறுகளை அது தனக்குரியனவாக ஏற்றுக்கொள்கிறது. அதற்காகத் தவறுகளை எவ்வாறாவது நியாயப்படுத்த அது முயற்சி செய்வதில்லை.

பதில் சொல்லும் பொறுப்புடைமை ஐயங்களையும், அச்சங்களையும், அவநம்பிக்கைகளையும் அறவே களைந்துவிடுகிறது. அந்த பொறுப்புக்கு உட்படுத்தப்பட்டவுடன் தன்னிடமுள்ள அச்சங்களையும் ஐயங்களையும் அகற்றி தெளிவுடன் செய்பட ஆரம்பிக்கிறது.  மேலும் தன்னிடம் ஒப்படைக்கப் பெற்ற கடும் பனிகளைப் பொறுப்புணர்வோடு நிறைவேற்றுகிறது. கவனத்தோடும், ஊக்கம் தளராமலும் தமது கடமைகளைப் பதில் சொல்லும் பொறுப்பு நிறைவேற்றுகிறது. இதனாலேயே அது தன்னை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லுகிறது. 

அது நல்லெண்ண உறுதிப்பாட்டையும் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது. நம்பிக்கை உறுதிப் பாட்டுக்கு ஒருவர் உரியவரா என்பதைப் பதில் சொல்லும் பொறுப்பு நிரூபித்துவிடுகிறது. ஒருவரது நம்பிக்கைக்கு அது ஊட்டமளிக்கிறது. பதில் பொறுப்புடையவராக நடந்துகொள்வோரிடம் மக்கள் தங்கள் மதிப்பையும் நம்பிக்கையினையும் வெளிப்படுத்துகின்றனர். முழுமையான நம்பிக்கையையும் அவர்களிடம் வைக்கின்றார்கள்.  பெரிய பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்குப் பதில் சொல்லும் பொறுப்பு வழிகோலுகிறது. அது முழுமையினையும் மனநிறைவினையும் அளிக்கிறது.

நற்செய்தி கூறும் கதை  : 

வெளியூருக்குப் பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்தார். தமது உடைமைகள் அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்தார். அவர் அவர் திறமைக்குத் தக்கவாறு ஒருவருக்கு 500 ரூபாயும், மற்றொருவருக்கு 300, வேறொருவருக்கு 100 எனவும் வழங்கிச் சென்றார். 500 ரூபாய்களைப் பெற்றவர், உடனடியாக அவற்றைப் பயன்படுத்திவேறு 500 சம்பாதித்தார். அவ்வாறே, 300 பெற்றவரும் மேலும் 300 சம்பாதித்தார். 100 ரூபாய் பெற்றவர் மண்ணைத் தோண்டித் தம் தலைவரது பணத்தைப் புதைத்துவைத்தார்.

நெடுங்காலத்திற்குப் பிறகு, அப்பணியாளர்களின் தலைவர் திரும்பிவந்து கணக்குக் கேட்டார். ரூ.500 பெற்றவர் அவரிடம் வந்து “ஐயா! நீங்கள் கொடுத்த ரூ.500-ஐ முதலீடாக்கி கூடுதல் 500 சம்பாதித்தேன்” என்றார். அதற்கு அத்தலைவர்,“நல்லது நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறியவற்றில் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தீர்; ஆதலால் பெரியவற்றுக்கு அதிகாரியாக நியமிப்பேன்” என்று பாராட்டினார்.

ரூ.300 பெற்றவரும் அவரிடம் வந்து “ஐயா நீங்கள் ரூ.300 கொடுத்தீர்கள்; மேலும் ரூ.300 சம்பாதித்துள்ளேன்” என்றார். அதற்கு அத்தலைவர்,“நல்லது நம்பிக்கைக்குரிய நல்லபணியாளரே, சிறியவற்றில் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தீர். பெரியவற்றுக்கு அதிகாரி ஆக்குவேன்” என்றார். ரூ.100 பெற்றவரோ திரும்பிவந்து “ஐயா, உம் குணங்களை நான் நன்கு அறிவேன்; நீங்கள் கடுமையானவர்; விதைக்காத இடத்தில் அறுப்பவர், தூவாத இடத்தில் சேர்ப்பவர். ஆகவே உங்களுக்கு அஞ்சி, கொடுத்த பணத்தை நிலத்தில் புதைத்துவைத்தேன்.

இதோ! நீங்கள் கொடுத்த அதே பணம்!” என்று திரும்பித் தந்தார். அதற்குத் தலைவர், “சோம்பேறிப் பணியாளனே, என் பணத்தை நீ வட்டிக்காரரிடம் கொடுத்திருந்தாலும் கூட, நான் வந்தவுடன் எனது தொகையை வட்டியுடன் பெற்றிருப்பேன்! எனவே, இவனிடமுள்ள பணத்தைப் பிடுங்கி ரூ.1000 உள்ளவனுக்குக் கொடுங்கள்;; பயனற்ற இந்தப் பணியாளனைச் சிறையிலே தள்ளுங்கள்” என்றார்.

பதில் சொல்லும் பொறுப்புடைமையை வளர்த்துக் கொள்ள வழிமுறைகள்  :

1. நல்லதே செய்தல் வேண்டும். நல்ல நேர்மறை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும். தீயதை அரவே ஒழித்து விலக்கல் வேண்டும்.

2. ஒருவருடைய நற்பண்பு நலன்களையும், நல்ல திறன்களையும் வளர்த்தல் வேண்டும்.

3. கல்வி நமக்கு வழங்கிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

4. உடைமைகளைக் கவனத்துடன் பயன்படுத்துதல்.

5. தம்மிடம் ஒப்படைத்த பணத்தை அறிவாற்றலுடன் செலவிடுதல்.

6. மூலவளங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுதல்.

7. தம்மிடம் ஒப்படைத்த பொருள்களைக் கவனத்துடன் பார்த்துக் கொள்ளுதல்.

8. சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளல்.

9. காலத்தைத் திட்டமிட்டுச் செலவிடுதல்.

10. பொது இடங்களில் கண்ணியமாக நடந்து கொள்ளுதல்.

11. சட்டஒழுங்குகளைக் கடைபிடித்தல்.

தமது திறமை முழுவதையும் கவனத்துடன் நிறைவேற்றுதல்.

தமது கட்டுப்பாடுகளைக் கவனத்துடன் நிறைவேற்றுதல்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து