முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 ஆண்டுகளில் 15 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டம் அமைச்சர் தங்கமணி பேட்டி

செவ்வாய்க்கிழமை, 1 ஆகஸ்ட் 2017      ஈரோடு

ஈரோடு, ஆக 1 பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் சார்பில், சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்ஷாபந்தன் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஈரோடு, சம்பத்நகர் கொங்கு கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் உமா தலைமையில், யோகா, தவம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, “மகிழ்ச்சிக்கான மந்திர சாவி’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். முன்னதாக, ரக்ஷாபந்தன் விழாவையொட்டி,  கொங்காளம்மன் கோயில் வணிக சங்கத் தலைவர் செல்வம் மஞ்சள் கொடியேற்றினார். வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகர், அனைத்துத் தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் சிவநேசன், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர், முத்துபாரதி, சித்தார்த்தா பள்ளித் தாளாளர் ஜெயபாரதி, பள்ளி, கல்வி ஒருங்கிணைப்பாளர் கோமதி உள்ளிட்டோர் பங்கேற்று ராக்கி கயிறு கட்டிக்கொண்டனர். விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகளும் ராக்கி கயிறு கட்டிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சியும் நடைபெற்றது. photo no 2
மாநில அளவிலான சிலம்பாட்டம் தொடக்கம்
 
மாநில அளவிலான சிலம்பாட்டம் ஈரோட்டில் நேற்று  நடைபெற்றது. தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டுச் சங்கம், ஈரோடு மாவட்ட சிலம்பம் விளையாட்டுச் சங்கம் சார்பில் ஈரோட்டில் மாநில அளவிலான சிலம்புப் போட்டிகள் நேற்று தொடங்கின. 28 மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் 24 ஆண்கள், 24 பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சப்-ஜூனியர் (14 வயதுக்கு கீழ்),  ஜூனியர் (17 வயதுக்கு கீழ்), சீனியர்( 18 முதல் 30 வயது வரை) என 3 பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 48 பேர் தேர்வு செய்யப்பட்டு அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்வர். தேசிய அளவிலான போட்டி சென்னையில் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.
 முன்னதாக இப்போட்டிகளை மாநகர் மாவட்ட அதிமுக செயலர் கே.வி.இராமலிங்கம் தொடக்கிவைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு சிலம்ப விளையாட்டுச் சங்க செயல் தலைவர் பொன்.ராமர் தலைமை வகித்தார். பொருளாளர் கண்ணதாசன் வரவேற்றார். எம்.எல்.ஏ. தென்னரசு, முன்னாள் எம்.எல்.ஏ.பொன்னுதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  3 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பரிசு வழங்கவுள்ளார். photo no2
பொல்லானுக்கு மணிமண்டபம் கட்ட கோரிக்கை
ஈரோடு, ஆக 1சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் உருவப்பட திறப்பு விழா, தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஈரோட்டில் நடந்தது. மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமை வகித்தார். பொல்லான் படத்தை திறந்து வைத்து, தலைவர் திருவள்ளுவன் கூறியதாவது சுதந்திர போராட்டத்தில், தீரன் சின்னமலை தளபதியாக விளங்கியவர், பொல்லான். அவருக்கு தமிழக அரசு, முழு உருவச்சிலை அமைத்து, மணி மண்டபம் கட்ட வேண்டும். ஆண்டு தோறும் அவரது நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து