ஓசூரில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

செவ்வாய்க்கிழமை, 8 ஆகஸ்ட் 2017      கிருஷ்ணகிரி
hsr

ஓசூர் தர்கா பகுதியில் சக்தி வாய்ந்த ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையட்டி இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையட்டி அம்மனுக்கு பால், சந்தனம், குங்குமம், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வகை பொருட்களால் அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

 

கொடியேற்றம்

 

சக்தி வாய்ந்த இந்த கோயிலில் வேண்டினால் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் இந்த கோயிலில் 28 ஆம் ஆண்டு திருவிழா துவங்கியது.அதிகாலை முதலே கணபதி கோமம், துர்கா கோமம், நவக்கிரக கோமம், உள்ளிட்ட கோமங்கள் நடைபெற்றன. அதனையடுத்து அம்மனை ஆற்றிலிருந்து எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது. இதில் கொடிமர பூஜை, சக்தி பூஜை, காப்புகட்டுதல், ஆகியவை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், சந்தனம், குங்குமம், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் அதிமுக அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மாதேவா,கூட்டுறவு சங்க தலைவர் ஆஞ்சனம்மா, கோவில் நிர்வாகிகள் பாபு,ராமசாமி,ராஜூ,கதிர்வேல்,ராம்நாத்,சிவாஜி,மணி,செல்வம் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து