முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க. ஸ்டாலின் சட்டம் படித்த வழக்கறிஞர் அல்ல: ஓ.பி.எஸ்.

ஞாயிற்றுக்கிழமை, 20 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சங்கரன்கோயில் : ஜெயலலிதா நினைவு இல்லம் குறித்து கருத்துக்கூற மு.க.ஸ்டாலின் ஒன்றும் சட்டம் படித்த வழக்கறிஞர் அல்ல என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் வீடு, நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். ஆனால் லண்டனில் இருந்து திரும்பி தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினிடம் இதுபற்றி கேட்டபோது ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இடமாக மாற்றுவது சட்டப்படி தவறு என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சுதந்திரப்போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 247-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் அருகே உள்ள நெற்கட்டும்சேவலில் அமைந்துள்ள ஒண்டிவீரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சங்கரன்கோயில் வந்தார். ஒண்டிவீரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் முன்பு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஸ்டாலின் கூறிய கருத்துப்பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர்,ஸ்டாலின் ஒன்றும் சட்டம் படித்த வழக்கறிஞர் அல்ல என்று காட்டமாக கூறினார். மேலும் அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக நல்ல முடிவு எட்டப்படும் என்றும் தெரிவித்தார். நேற்றுமுன்தினமும் இதே கருத்தை அவர் தெரிவித்தார். எனவே இன்று அ.தி.மு.க. அணிகள் இணைந்துவிடும் என்று ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து