கோயம்பத்தூர் சோமனூர் பேருந்து நிலைய சுவர் இடிந்த விபத்து: விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்

திங்கட்கிழமை, 11 செப்டம்பர் 2017      தமிழகம்
cbe busstand collapse 2017 9 11

சென்னை : கோயம்பத்தூர் சோமனூர் பேருந்து நிலைய சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக ககன்தீப்சிங் ஐஏஎஸ் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

கடந்த 7-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், சோமனூர் பேரூராட்சியிலுள்ள பேருந்து நிலைய மேற்கூரையின் பகுதி கான்கிரிட் சுவர் இடிந்து, அதன் கீழ் நின்று கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது மற்றும் 12 பேர் காயமடைந்ததற்கான காரணங்கள்மற்றும் சூழ்நிலைகள் குறித்து தக்க விசாரணை மேற்கொள்ளும் பொருட்டும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்கும் பொருட்டும், மூத்த இந்திய ஆட்சிப் பணிஅதிகாரியான ககன்தீப் சிங் பேடி, ஒரு நபர் விசாரணைக் குழுவாக அரசு நியமித்துள்ளது. மேற்கண்ட விசாரணைக் குழு தனது விசாரணை அறிக்கையை இரண்டு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து