முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு ரதம்: அமைச்சர் ஒ.எஸ்.மணியன் துவங்கி வைத்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்றார்

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் இராஜாஜி பூங்கா அருகே டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வு ரதத்தினை கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தலைமையில், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது,

 

 

அமைச்சர் சுற்றுப்பயணம்

 

டெங்குகாயச்சல் தடுப்பு தொடர்பாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்க்கொண்டு வருகிறது. டெங்கு தடுப்பு பணிக்காக கூடுதலாக நான்காயிரம் மருத்துவர்களையும், நாற்பது ஆயிரம் மஸ்தூர்ளையும் அரசு நியமித்துள்ளது. பொது மக்களாகிய நீங்கள் காய்ச்சல் வந்தால் உடணடியாக அரசு மருத்துவமனையை நாடி சிகிச்சை பெற வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதுமான வகையில் மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உபகரணங்கள் தயார்நிலையில் உள்ளன. பொதுமக்கள் தங்கள் வீட்டையும் மற்றும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தார்.

இந்த ரதமானது வேதாரண்யம் இராஜாஜி பூங்காவில் தொடங்கி வேதாரண்யம் ஒன்றியம் நெய்விளக்கு, குரவப்புலம், கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், கரியாப்பட்டினம், செட்டிப்புலம், கத்தர்pப்புலம், செம்போடை, தலைஞாயிறு ஒன்றியத்தில் தாமரைப்புலம், கள்ளிமேடு, நாலுவேதபதி, வெள்ளப்பள்ளம், கோவில்பத்து, கீழையூர் ஒன்றியத்தில் புதுரோடு, தாதன்திருவாசல், வேட்டைகாரனிருப்பு, புதுப்பள்ளி, விழுந்தமாவடி, காமேஸ்வரம், பிரதாபராமபுரம், செருதூர், வேளாங்கண்ணி பேரூராட்சியில் வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் ஒன்றியம் தெற்குபொய்கைநல்லூர், வடக்குபொய்கைநல்லூர், அக்கரைப்பேட்டை, நாகப்பட்டினம் நகராட்சி புத்தூர், மஞ்சக்கொல்லை, சிக்கல், ஆழியூர், கீழ்வேளுர் பேரூராட்சி கீழ்வேளுர், கீழ்வேளுர் ஒன்றியத்தில் காருதாகுடி, ஓவர்குடி, கடம்பங்குடி, மூங்கில்குடி, திருமருகல் ஒன்றியம் பெருஞ்சாத்தான்குடி, பில்லாளி, திருக்கண்ணப்புரம், திருப்புகழுர், திருமருகள், பனங்குடி, திட்டச்சேரி, நாகூர் ஆகிய ஊர்களில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களும், கலெக்டர் அவர்களும் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம், டெங்கு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், வருவாய் கோட்டாச்சியர் மா.கண்ணன், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் மதுமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அரசுஅலுவலர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து