ரஷ்ய இளைஞருக்கு உதவிக்கரம் நீட்டிய மத்திய அமைச்சர் சுஷ்மா

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      இந்தியா
russian youth help sushma swaraj 2017 10 11

புதுடெல்லி : காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோயிலில் யாசகம் வேண்டி நின்ற ரஷ்ய இளைஞருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.

ரஷ்யாவிலிருந்து இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்த இளைஞர் இவாஞ்சலின் தனது ஏடிஎம் பின் நம்பர் பிரச்சினைக்குள்ளானதால் கோயில் வாசலில் யாசகம் வேண்டி அமர்ந்திருந்த செய்தி பல்வேறு ஊடகங்களிலும் நேற்று வெளியானது.

இது தொடர்பான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டிய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், "இவாஞ்சலின்.. உங்களது நாடான ரஷ்யா எங்களுடைய பழம்பெரும் நட்பு நாடு. சென்னையில் உள்ள எனது துறை சார் அதிகாரிகள் உங்களுக்கு உதவுவர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.


இவாஞ்சலின் (24) என்ற அந்த நபர் அசலான பாஸ்போர்ட், விசா என்று சட்டபூர்வமான ஆவணங்களை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து