தி.மலையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாள் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017      திருவண்ணாமலை
photo02

 

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் தணிக்கும் துறை சார்பில் நேற்று நடைபெற்ற சர்வதேச பேரிடர் குறைப்பு நாள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கொடியசைத்து துவக்கி வைத்து, இயற்கை இடர்பாடுகளின் போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய செயல்கள் குறித்த விளக்க குறிப்பேடு வழங்கினார்.

விழிப்புணர்வு பேரணி

மாவட்ட வருவாய் அலுவலர் பொ.இரத்தினசாமி, வருவாய் கோட்ட அலுவலர் உமாமகேஸ்வரி, தாசில்தார் ஆர்.ரவி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் தீர்த்தமலை, நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம், மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.அருள்குமரன், உடற்கல்வி ஆய்வாளர் ஏ.முனியன், பள்ளி துணை ஆய்வாளர் ஏ.குமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஆர்.ஜெகதீசன், மண்டல துணை தாசில்தார்கள் அமுல், பார்த்தசாரதி, டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஹ¨பர்ட் தனசுந்தரம், அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

இப்பேரணி, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து, பெரியார் சிலை, அண்ணா சிலை, காந்தி சிலை வழியாக நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது.

இதனை தொடர்ந்து, திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாவட்ட கலெக்டர் தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பாக நில நடுக்கம், வெள்ளம், சாலை விபத்து, தீ விபத்து, ஆகிய பேரிடர் காலங்களில் உதவி கிடைக்கும் வரை, பொதுமக்கள், மாணவர்கள் தங்களை எப்படி காப்பாற்றிக் கொள்வது, பாதுகாத்துக் கொள்வது என தீயணைப்பு வீரர்கள் மூலம் நேரடியாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும், தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்தும் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. மாவட்ட கலெக்டர் பேசுகைளில் ‘இங்கு சிறப்பான ஒத்திகை நிகழச்சி நடத்திக் காட்டிய தீயணைப்பு வீரர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். பேரிடர் காலங்களில் நீங்கள் உங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என செயல் விளக்கம் இங்கு அளிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை வருவதால் சந்தோஷமாக கொண்டாட நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அனைவருக்கும் என்னுடைய பாதுகாப்பான, மகிழ்ச்சியான தீபாவளி நல் வாழ்த்துக்கள்’ என்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து