முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் தேர்தல் தேதியை பிரதமரே அறிவிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் காத்திருக்கிறதா? ப.சிதம்பரம் கிண்டலான கேள்வி

வெள்ளிக்கிழமை, 20 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், அக்கட்சியின் முத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கிண்டலாக சில கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

குஜராத்தில் பாஜக அரசு இறுதி கட்டமாக இலவசங்களை அறிவிக்கவும், பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டம் நடைபெறவும், சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவிக்காமல், தேர்தல் ஆணையம் கால தாமதம் செய்வதாக, முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
இமாச்சல பிரதேச மாநிலத்தில், நவம்பர் 9ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என, அக்டோபர் 12ல், தேர்தல் ஆணையம் அறிவித்தது. அம்மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும், டிசம்பர் 18ம் தேதிக்குள், குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கூறியது.

ஆனால், குஜராத் தேர்தல் தேதியை விரைவில் அறிவிப்பதாக கூறிய தேர்தல் ஆணையம், இதுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "குஜராத் வாக்காளர்களை கவரும் வகையில் பாஜக இலவசங்கள் மற்றும் திட்டங்களை அறிவிக்க அவகாசம் தரப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அங்கு சுற்றுப்பயணம் செய்து, பொதுக்கூட்டத்தில் அறிவிப்புகளை வெளியிடும் வரை தேர்தல் தேதி அறிவிப்பு தாமதப்படுதப்படுகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது" என ட்வீட் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து