முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரோ கபடி லீக் போட்டி: பிளேஆப் சுற்று நாளை தொடக்கம்

சனிக்கிழமை, 21 அக்டோபர் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை: புரோ கபடி லீக் தொடர் முடிவடைந்த நிலையில் பிளே ஆப் சுற்று நாளை தொடங்குகிறது. இதில் ‘குவாலி பையர்-1’ ஆட்டத்தில் குஜராத் அணியும் பெங்கால் அணியும் மோதுகின்றன.

5-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்றுடன் 132 லீக் ஆட்டங்களும் முடிந்தது. லீக் ஆட்டம் ஒன்றில் குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட் 23-22 என்ற கணக்கில் புனேயை வீழ்த்தியது. இதன் மூலம் அந்த அணி ‘ஏ’ பிரிவில் 87 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தது. புனேரி பில்தான் 80 புள்ளியுடன் 2-வது இடத்தையும், அரியானா 79 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தன. முதல் 3 இடங்களை பிடித்த குஜராத், புனே, அரியானா அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. மும்பை, ஜெய்ப்பூர், டெல்லி அணிகள் வெளியேற்றப்பட்டன.

‘பி’ பிரிவில் தெலுங்கு டைட்டன்ஸ்- பெங்கால் ஹரியாஸ் மோதிய ஆட்டம் 37-37 என்ற புள்ளிக் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்த பிரிவில் பெங்கால் வாரியாஸ், நடப்பு சாம்பியன் பாட்னா பைரேடஸ், உ.பி. யோதா ஆகிய அணிகள் முதல் 3 இடங்களை பிடித்து பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின. பெங்களூரு புலால், தெலுங்கு டைட்டன்ஸ். தமிழ் தலைவாஸ் அணிகள் வெளியேற்றப்பட்டன.

இன்று ஓய்வு நாளாகும். நாளை முதல் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் தொடருகிறது. இந்த ஆட்டங்கள் மும்பை, சென்னையில் நடக்கிறது. நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் ‘எலிமினேட்டர்’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த புனே- ‘பி’ பிரிவில் 3-வது இடத்தை பிடித்த உ.பி.யோதா அணிகள் மோதுகின்றன. இதில் தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும். இதில் வெல்லும் அணி எலிமினேட்டர்-3 ஆட்டத்தில் விளையாடும்.

இரவு 9 மணிக்கு நடைபெறும் ‘எலிமினேட்டர்-2’ ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த பாட்னா பைரேட்ஸ்- ‘ஏ’ பிரிவில் 3-வது இடத்தை பிடித்த அரியானா ஸ்டலர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணி ‘எலி மினேட்டர்-3’ போட்டியில் ஆடும்.

24-ந்தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும் ‘குவாலி பையர்-1’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த குஜராத்- ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த பெங்கால் அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி சென்னையில் 28-ந்தேதி நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி ‘குவாலி பைனல்-2’ ஆட்டத்தில் விளையாடும். 24-ந்தேதி இரவு 9 மணிக்கு ‘எலிமினேட்டர்-3’ ஆட்டம் நடைபெறும். இதில் வெல்லும் அணி ‘குவாலியர்ஸ்-2’ ஆட்டத்துக்கு தகுதி பெறும். தோற்கும் அணி வெளியேறும். ‘குவாலி பைனல்-2’ ஆட்டத்தில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு நுழையும் 2-வது அணியாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து