எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை மடப்புரத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

7 siva news

சிவகங்கை.-சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கால்நடைப் பராமரிப்புத் துறையின் சார்பில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், மடப்புரம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்   நடைபெற்றது.
             இம்முகாமில் அனைத்து கால்நடைகளுக்கும் மருத்துவச் சிகிச்சை, கறவைப் பசுக்களுக்கு இனப்பெருக்க மருத்துவ பரிசோதனையும், செயற்கைமுறை கருவூட்டல் பணி, மலடுநீக்க சிகிச்சை, தடுப்பூசி, வெள்ளாடுகள்,செம்மறியாடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழி மற்றும் நாய்களுக்கு மருத்துவ சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
            முகாமில் கலந்து கொண்ட 20 விவசாயிகளுக்கு தலா 4 கிலோ வீதம் 80 கிலோ தீவனப் பயிர் விதை வழங்கப்பட்டது. மேலும், 52 விவசாயிகளுக்கு தலா 1 கிலோ வீதம் தாதுஉப்புக் கலவை வழங்கப்பட்டது. மொத்தம் 1,223 கால்நடைகளுக்கு நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் சிகிச்சைகள் வழங்கப்பட்டது என கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கருணாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து