முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணமதிப்பு நீக்கம் பிரதமரின் சிந்தனையற்ற செயல்: ராகுல் காந்தி கடும் தாக்கு

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை நாட்டின் மிகப்பெரிய சோகம், பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையற்ற செயல் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம், பழைய 500 - 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. கள்ளப் பணம் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எனவும் மத்திய அரசு வர்ணித்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையற்ற செயலால் கோடிக்கணக்கான நேர்மையான இந்தியர்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டுள்ளது. - ராகுல் காந்தி

பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8ம் தேதியான நேற்று ஒராண்டு ஆகும்நிலையில், இதை கறுப்பு தினமாக எதிர்கட்சிகள் கடை பிடித்து வருகின்றன. அதேசமயம் கறுப்பு பண ஒழிப்பு தினமாக ஆளும் பாஜக கடை பிடித்து வருகிறது.

இந்நிலையில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து ட்விட் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
‘‘பணமதிப்பு நீக்க நடவடிக்கை நாட்டின் மிகப்பெரிய சோகம். இதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையற்ற செயலால் கோடிக்கணக்கான நேர்மையான இந்தியர்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் அழிக்கப்பட்டுள்ளது. அந்த மக்களுக்கு காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும்’’ எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து