முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தர நிர்ணய சான்று பெறுவதற்கான செயல் விளக்க முகாம்: இணை இயக்குநர் தலைமையில் நடந்தது

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள திருச்சி, தின்டுக்கல், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கருர், நாகப்பட்டிணம் மாவட்டங்களை சார்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேசிய மருத்துவமனைகளின் தர நிர்ணய சான்று பெறுவதற்கான செயல் விளக்க முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர்.சம்சாத்பேகம் தலைமையில் நடைபெற்றது.

செயல் விளக்க முகாம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள பத்து அரசு மருத்துவமனைகளிலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கிழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மன இறுக்க நோய்க்கான தெரபி சிகிச்சை காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தி;ல அங்கீகாரம் பெற ஒரு வருட காலத்திற்குள் மத்திய அரசின் தேசிய அங்கீகாரம் பெற வேண்டும் என அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மத்திய அரசின் மருத்துவமனை தரச்சான்று பெறுவதற்காக விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கப்பட்டது. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு டெங்கு நோயாளிகளை கையாளும் முறை மற்றும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள முறைகள் குறித்து இம்முகாமில் விளக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர்.ஏகநாதன், மாநில தரச்சான்று அலுவலர் டாக்டர்.ஹபிசா தமிழ்நாடு சுகாதார திட்ட மருத்துவ அலுவலர்கள் டாக்டர்.அமண்டா, டாக்டர்.தேவசேனா, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் திருமதி.சுகேசினி, விடால் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளர்கள் மருத்துவர்.வாலகுரு, .பாலமுரளிகிருஷ்ணன் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட மாவட்ட திட்ட அலுவலர்.கிஷோர்குமார், ஒருங்கிணைப்பாளர்ரவிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ( மேலும் விவரங்களுக்கு :கிஷோர்குமார் 73730 04351)

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து