எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சி சிவகங்கை கலெக்டர் லதா, துவக்கி வைத்தார்.

13 siva news

   சிவகங்கை.-சிவகங்கை மாவட்ட மேலவாணியங்குடி ஊராட்சி ஆயதப்படை குடியிருப்பு பின்புறம் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பெருமளவு மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் க.லதா, துவக்கி வைத்தார்.
  சிவகங்கை மாவட்டத்தில் 800 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இன்று 400 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
          இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, உதவி திட்ட அலுவலர்கள், சிவகங்கை வட்;டார வளர்ச்சி அலுவலர் ஜஹாங்கீர், வட்டாட்சியர் கந்தசாமி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து