எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்ட நிலையில் நேற்றுடன் அது நிறைவடைந்தது.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இந்த விருப்ப மனு கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து விருப்ப மனுக்களை அ.தி.மு.க.வினர் தாக்கல் செய்து வருகின்றனர்.
மனு தாக்கல் செய்ய வரும்போது, பலரும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போல வேடமிட்டு வருகின்றனர். இதனால் இவர்களை பார்க்க அ.தி.மு.க. அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் கூட்டம் அலைமோதி வருகிறது. அ.தி.மு.க. விருப்ப மனு ரூ.15,000-க்கும், புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான விருப்ப மனு ரூ.5000-க்கும் வழங்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வினர் அளித்து வரும் விருப்ப மனுக்களை அமைப்பு செயலாளர்கள் முன்னின்று பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த 15ம் தேதி தொடங்கிய விருப்ப மனு விநியோகம் நேற்றுடன் நிறைவடைந்தது.
எனவே போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, ரூ.15,000க்கு வரைவோலை எடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விருப்ப மனுக்களை வழங்க நேற்று கடைசி நாள் என்பதால், ஏராளானோர் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


