உலக மீனவர் தினம் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      கன்னியாகுமரி
kanyakumari collector

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   தலைமையில், உலக மீனவர் தினம், குளச்சல் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 21-ம் தேதி அன்று உலக மீனவர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

 மீனவர் தின விழா

அதன்படி இவ்வாண்டும் மீன்வளத்துறை மூலம் ‘உலக மீனவர் தினத்தை’ சிறப்பித்திடும்படியும், துறையின் மீனவர் நலத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை மீனவ மக்களுக்கு பறைசாற்றிடும் விதமான நிகழ்ச்சிகள், குளச்சல், மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.இதில் மீனவ, மாணவ, மாணவியருக்கான கட்டுரை மற்றும் ஓவியப்போட்டியும், மீனவ மகளிருக்கான கடல் உணவு தயாரித்தல் போட்டியும், மீனவ இளைஞர்களுக்கான நீச்சல் போட்டியும் நடைபெற்றது.மேலும், மக்கள் பயன்பெறும் வகையில் மீன்வளத்துறை சார்பில், மீனவர்களுக்கான உயிரி தொழில்நுட்ப அடையாள அட்டை  வழங்குவதற்கான விண்ணப்பம் விநியோகம், தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தில் சேர விண்ணப்பம் விநியோகம், குளிர்காப்பு பெட்டிகள்  மானியத்தில் பெற விண்ணப்பம் விநியோகம், 1 ஹெக்டேர் பரப்பில் புதிதாக குளம் மானியத்தில் அமைத்திட விண்ணப்பம் விநியோகம், உள்நாட்டு மீனவர்களுக்கான 50 சதவீதம் மானியத்தில் வலை மற்றும் கண்ணாடி நாரிழை பரிசல்கள் வழங்கும் திட்டத்தின் விண்ணப்பங்களும் விநியோகம் செய்யப்பட்டது.   மேலும், மீன்வளத்துறை திட்டங்கள், சுகாதாரத்துறை மூலமாக டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம், நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனையுடன் இணைந்து கண் மருத்துவ முகாம் மற்றும் கடலோர காவல் குழுமத்துடன் இணைந்து நடத்தும் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டது.

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு, குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற மீன்வளத்துறை சார்பாக, கண்காட்சி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த மீன்வளத்துறை, கடல் உணவு பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், இந்திய அரசு  சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்  மீனவ மகளிரால் தயாரிக்கப்பட்ட தேங்காய் சிறட்டையில் செய்யப்பட்ட கலைநயம் மிக்க அலங்கார பொருள்கள், ர்pலையன்ஸ் குழுமம்இ சுகாதார துறை - மருத்துவ முகாம் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம், உலக விவசாய மேம்பாட்டு நிதி - முகாம் (ஐகுயுனு)இ பெஜான்சிங் மருத்துவமனையின் கண் பரிசோதனை மருத்துவ முகாம் ஆகிய கண்காட்சி அரங்கத்தினை, கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   பார்வையிட்டார்.அதனை தொடர்ந்து, ‘மீனவ தின விழா’ நிகழ்ச்சியில், மீனவர்களுக்கான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற கன்னியாகுமரியை சார்ந்த  டேனியல்தாஸ் என்பவருக்கு முதல் பரிசுதொகையாக ரூ. 5 ஆயிரமும், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும்,  ஆன்றோ ஜெரோனிக் என்பவருக்கு இரண்டாம் பரிசு தொகையாக ரூ. 3 ஆயிரமும், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், மீனவ பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நடைபெற்ற ஓவியப்போட்டியில் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை) இணையம்புத்தன்துறை, புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜோசப் ஸ்டெபி என்பவருக்கு முதல் பரிசுதொகையாக                       ரூ.2 ஆயிரத்து 500ஃ-மும், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், சின்னவிளை, புனித ஜோசப் தொடக்கப்பள்ளி மாணவி ஆன்லின் லெனிஷா என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.1,500ஃ-ம், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை) கடியப்பட்டணம், புனித பீட்டர் நடுநிலைப்பள்ளி மாணவன் சகாய சாபின்ரோகர் என்ற மாணவனுக்கு முதல் பரிசுதொகையாக ரூ.2,500ஃ-ம், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், இரண்டாம் பரிசுதொகையாக பள்ளம், புனித ஜூட் ததேயூஸ் மேல்நிலைப்பள்ளி ஆன்றோ வின்சி என்ற மாணவிக்கு ரூ.1,500ஃ-ம், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், மீனவ மகளிருக்கான சமையல் போட்டியில் வெற்றி பெற்ற கோடிமுனையை சார்ந்த  லிட்டில் பிளவர்,  மெர்லின் பாமா மற்றும்  செலீன் ஆகியோர்களுக்கு முதல் பரிசுதொகையாக ரூ. 5 ஆயிரமும், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், குளச்சலை சார்ந்த  யூஜின் மேரி மற்றும்  சுஜா ஆகிய மீனவ மகளிர்களுக்கு இரண்டாம் பரிசுதொகையாக ரூ. 3 ஆயிரமும், கேடயம் மற்றும் பாராட்டுசான்றிதழும், கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர்  ஜெ.ஜி. பிரின்ஸ், தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையதலைவர்  எம். சேவியர் மனோகரன்,                        துணை இயக்குநர் (மீன்வளத்துறை)  லேமக் ஜெயகுமார், உதவி இயக்குநர்கள் (மீன்துறை)  த. நடராஜன் (நாகர்கோவில்),  வே. தீபா (கன்னியாகுமரி),  ஜெ.லை. அஜீத் ஸ்டாலின் (குளச்சல்), மானிய ஒருங்கிணைப்பாளர்  வினோத் இரவீந்திரன், கடலோர காவல் குழுமம் ஆய்வாளர்  நவின் மற்றும் மீனவ பிரதிநிதிகள், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து