தருமபுரி அரசுகலைக்கல்லூரியில் வரும் 2ம் தேதி கல்விக்கடன் முகாம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தகவல்

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      தர்மபுரி

 

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவர்களது உயர் கல்வியினை தொடரும் வகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக கல்விக்கடன் பெற மாவட்டந்தோரும் முகாம்கள் நடத்திட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தருமபுரி மாவட்டத்தில் வரும் 2ம் தேதி (சனிக்கிழமை) அன்று அரசு கலைக்கல்லூரி, தருமபுரி கல்லூரியில் கல்விக்கடன் முகாம் நடத்தப்பபட உள்ளது.

கல்விக்கடன் முகாம்

 

கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் ஒவ்வொருவரும் தான் விரும்பும் உயர்கல்வி பயில தேவைப்படும் கல்விக்கடன் குறித்த விண்ணப்பத்தினை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் மத்திய உயர்கல்வித் துறையினரால் நடத்தப்படும் "வித்யாலட்சுமி இணையதளத்தின் மூலமாக பதிவேற்றம் செய்து விட்டு மேற்காண் முகாமில் கலந்துக்கொள்ளுமாறு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுஃஅரசு உதவிபெறும்ஃசுயநிதி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளிலும் 2016-2017ஆம் கல்வியாண்டில்12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயின்று வரும் மற்றும் கல்விக்கடன் கிடைக்காத காரணத்தால் உயர்கல்வி பயிலாத மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் சுயநிதிப்பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்று நாளது வரையில் கல்விக்கடன் பெற இயலாத நிலையில் உள்ள மாணவர்களை கண்டறிந்து மேற்காண் இணையதளத்தில் மாணவர் விவரங்களை பதிவு செய்திட அறிவுரை வழங்குவதுடன், சார்ந்த மாணவர்கள் கல்விக்கடன் முகாமில் கலந்துக்கொள்ள தக்க தொடர்நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்சுயநிதிப் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து