முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் மணிவண்ணன் குடும்பத்திற்கு ராணுவ மைய நலநிதி ரூ.50 ஆயிரம்: கலெக்டர் கந்தசாமி வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர் நலத் துறை சார்பில் நடைபெற்ற படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து நிகழ்ச்சியில், கடந்த ஜூன் 6ந் தேதி ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த திருவண்ணாமலை மாவட்டம், தேப்பனந்தல் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் குடும்பத்திற்கு ராணுவ மைய நலநிதி ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை அவரின் தாயார் சின்னபொண்ணுவிடம் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.

படைவீரர் கொடிநாள்

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.இரத்தினசாமி, முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் கோ.ஜெ.விஜயகுமார், வருவாய் கோட்ட அலுவலர் உமாமகேஸ்வரி, உதவி ஆணையர் (கலால்) எம்.எஸ்.தண்டாயுதபாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.ஜானகி, துணை கலெக்டர் (பயிற்சி) து.சுரேஷ், முன்னாள் படைவீரர்கள் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கே.எஸ். கந்தசாமி பேசுகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினர் என மொத்தம் 11,589 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசின் சார்பாக 2017-18 ஆம் நிதி ஆண்டில் திருமண நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, இரண்டாம் உலகப்போர் நிதியுதவி (விதவையர் மற்றும் மு.ப.வீ.), மாதாந்திர நிதியுதவி (விதவையர் மற்றும் மு.ப.வீ.), கண்பார்வை இழந்தோர் நிதியுதவி, தொழு நோய் நிவாரண நிதியுதவி, புற்று நோய் நிவாரண நிதியுதவி, மனவளர்ச்சி குன்றிய முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்குகான நிதியுதவி, பக்கவாத நோய் நிவாரண நிதியுதவி, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடங்களை பெற்ற முன்னாள் படைவீரரின் வாரிசுதாரர்களுக்கு பரிசுத்தொகை, இராணுவ யைம நல நிதி, என மொத்தம் 611 முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்தோர்களுக்கு ரூ.4.65 கோடி மதிப்பிலான நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டை, நாட்டில் உள்ள பொதுமக்களை படைவீரர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பாதுகாத்து வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பாக முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்தோர்களுக்கு அனைத்து உதவிகளும் சிறப்பாக செய்து வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கடந்த 2016-17 ஆம் ஆண்டு கொடிநாள் நிதி வசூலிக்க ரூ.35 இலட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ.44 இலட்சம் கொடிநாள் நிதி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த 2017-18 ஆம் நிதி ஆண்டிற்கு கொடிநாள் நிதி வசூல் இலக்காக ரூ.39.28 இலட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து