தென்னம்பட்டி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் கலெக்டர் என்.வெங்கடேஷ் தலைமையில் நடந்தது

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      தூத்துக்குடி
tuty collector

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், கயத்தாறு வட்டம் தென்னம்பட்டி கிராமத்தில், கலெக்டர் என்.வெங்கடேஷ்,  தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.முகாமில் கலெக்டர் என்.வெங்கடேஷ்,  தெரிவித்ததாவது:

மனுநீதி நாள் முகாம்

நமது மாவட்டத்தை முழு சுகாதாரமான மாவட்டமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரம் என்பது ஒவ்வொருவரின் பொறுப்பு, அதை பேணி காப்பது இங்கு கூடியிருக்கும் கிராம மக்களாகிய உங்களிடம் தான் உள்ளது. குறிப்பாக, திறந்த வெளியில் மலம் கழிப்பதினால் ஏற்படும் தீமைகள், உயிர் இழப்புகள், நோய் தொற்றுகள் ஆகியவற்றை தவிர்க்க தங்கள் இல்லங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தனி நபர் இல்லக்கழிப்பறைகளை பயன்படுத்தவேண்டும். இப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் தனி நபர் இல்லக்கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தங்கள் பகுதியை சுகாதாரத்துடன் வைத்துக்கொண்டால் டெங்கு காய்ச்சல் போன்ற நோய் பரவமால் தடுக்கலாம். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் தானாக சுய வைத்தியம் செய்து கொள்ளமால், தாமதமின்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனக்கு சென்று மருத்துவரின் ஆலோசனையின்படி உரிய சிகிச்சை பெற வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், அதற்கான உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. நீங்கள் முழு பொறுப்புடன் செயல்பட்டால் நமது சமுதாயத்தை முழு வளர்ச்சியடைந்த, ஆரோக்கியமான சமுதாயமாக உருவாக்க முடியும். மேலும், நீங்கள் அளித்துள்ள மொத்த கோரிக்கை மனுக்கள் 224, அதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது 89, தள்ளுபடி செய்யப்பட்டது 135 ஆகும். தள்ளுபடி செய்யப்பட்ட கோரிக்கை மனுக்களுடன், உரிய சான்றிதழ்கள் இணைக்கப்பட்டு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் என்.வெங்கடேஷ்,  தெரிவித்தார்கள்.முகாமில் வருவாய்த்துறையின் மூலம் 39 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவினையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு அட்டை, ஊனமுற்றோர் உதவித்தொகை என மொத்தம் ரூ.2,11750- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,  மாவட்ட வழங்கல் துறையின் மூலம் 24 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையினையும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 4 வது தவனையாக 7 பயனாளிகளுக்கு ரூ.35808-ம், வேளாண்மைத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு தென்னங்கன்று, 2 பயனாளிகளுக்கு மான்ய விலையில் வேளாண் இடுபொருள்களை கலெக்டர் என்.வெங்கடேஷ்,  வழங்கினார்கள்.  முன்னதாக கலெக்டர் என்.வெங்கடேஷ்,  தென்னம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றினை நட்டார். தொடர்ந்து மனுநீதி நாள் முகாமில் வேளாண்மைத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட கண்காட்சி மற்றும் சுகாதாரத்துறையின் மூலம் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை பார்வையிட்டார்கள். 

 இம்முகாமில் கோவில்பட்டி கோட்டாட்சியர் .பி.அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) காமராஜ், இணை இயக்குநர் (வேளாண்மை) மு.சு.நா.செல்வராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) இ.வ.நா.முத்து எழில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் .கீதா, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சேகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான், வட்டாட்சியர் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து