சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் வழங்கும் விழா

வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017      தூத்துக்குடி
chiristmas dress donate function

நாசரேத் அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின் சார்பில் பிரகாசபு ரத்திலுள்ள சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் புத்தாடைகள்

நாசரேத் அன்னை தெரசா தொண்டு நிறுவனம் சார்பில் பிரகாசபுரம் செவன் டாலர்ஸ் சிறுவர் இல்லத்திலுள்ள குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் மற் றும் இலவசசீருடைகள் வழங்கும் விழாவும்,அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தின்  12-வது ஆண்டு விழாவும் நடைபெற்றது. விழாவினை பிரகாசபுரம் பங்குத்தந்தை அ. அந்தோணி இருதய தோமாஸ் பிரார்த்தனை செய்து துவக்கி வைத்தார். விழாவிற்கு நாசரேத்நகரவியாபாரிகள் சங்கதுணைத்தலைவர் இ.ஞானையா தலைமை வகித்தார். நாசரேத் நகர வணிகர் சங்க செயலாளர் வே.செல்வன், பி.ஜெகன் கிறிஸ்டோபர்,இ. ஜெபாமணிராஜ்,எம்.ராஜ்குமார்,எஸ்.பி.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.நாசரேத்-கந்தசாமிபுரம் புனித வளன் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் குசெ.செல்வன் வரவேற்றுபேசினார்.விழாவில் தைலாபுரம் உபகார அன்னை ஆலயப் பங்குத்தந்தை லியோ செயசீலன், இ.கிருஷ்ணராஜ்,பி.அன்னக்குமார், டி.முத்துக்குட்டி, அருட்சகோதரி.அலெக்ஸாண்ட்ரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் தொழி லதிபர் ஜெ.இருதய ஞானரமேஷ் 60 மாணவ,மாணவிகளுக்கு இலவச சீருடைகளை வழங்கி உரையாற்றினார். முடிவில் அன்னை தெரசா தொண்டு நிறுவன தலைவர் ம.அந்தோணிராஜா நன்றி கூறினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை அன்னை தெரசா தொண்டு நிறுவன தலைவர் ம.அந்தோணிராஜா தலைமையில் செயலாளர் அ.காட்வின் மற்றும் நிர்வாகக்குழு உறுபபினர்கள் செய்திருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து